»   »  இந்த இயக்குனரை பார்த்தால் பொறாமையா இருக்கு: கவுதம் மேனன்

இந்த இயக்குனரை பார்த்தால் பொறாமையா இருக்கு: கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் ரொம்ப தெளிவாக இருக்கிறார். 22 வயதில் நான் இப்படி இருந்தேனா என யோசிக்கிறேன். நம்ம பசங்க இப்படி இருப்பாங்களான்னு யோசிக்கிறேன் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த துருவங்கள் 16 படத்தின் 75து நாள் விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

பொறாமை

பொறாமை

கையில் ஸ்கிரிப்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதுவே எனக்கு பொறாமையாக இருக்கு.

சினிமா

சினிமா

சினிமா வந்து திறமைசாலிகளை வரவேற்கும். தமிழ் சினிமா வந்து கூரையை பிச்சுக்கிட்டு வரவேற்கும். அதை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு ஒரு பெரிய உதாரணம் கார்த்திக் நரேன் தான்.

துருவங்கள் 16

துருவங்கள் 16

ஒரு 21, 22 வயது நபர் எடுத்த படம் இவ்வளவு அருமையாக வந்ததை நான் பார்த்ததே இல்லை. நான் துருவங்கள் 16 படம் பார்க்கும் முன்பே கார்த்திக்கை சந்தித்தேன். அப்போது நான் உங்க ரசிகன் சார் என்றார் கார்த்திக். இந்த படத்தை பார்த்த பிறகு நான் அவர் ரசிகனாகிவிட்டேன்.

நரகாசுரன்

நரகாசுரன்

அவருடைய அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்று இந்த படம் பார்க்கும் போதே தோன்றியது. அவரின் அடுத்த படமான நரகாசுரனை நான் தயாரிப்பதில் மகிழ்ச்சி.

கார்த்திக்

கார்த்திக்

கார்த்திக் ரொம்ப தெளிவாக இருக்கிறார். 22 வயதில் நான் இப்படி இருந்தேனா என யோசிக்கிறேன். நம்ம பசங்க இப்படி இருப்பாங்களான்னு யோசிக்கிறேன்.

பொறாமை

பொறாமை

கையில் ஸ்கிரிப்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதுவே எனக்கு பொறாமையாக இருக்கு. அனைத்து ஹீரோக்களும் அவருடன் பணியாற்ற விரும்புவார்கள். ஏற்கனவே பல ஹீரோக்கள் லைனில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ரகுமான்

ரகுமான்

ரகுமான் சார் பாலசந்தர் சார் படத்தில் பார்த்தது போன்றே இன்னும் அப்படியே உள்ளார். அவருக்கு பிடித்தால் தான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என நினைக்கிறேன். உலகத் தரம் வாய்ந்த படத்தை அளித்ததற்கு நாம் தான் கார்த்திக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் கவுதம் மேனன்.

English summary
Gautham Menon said that he is jealous of Dhuruvangal Pathinaaru fame young director Karthick Naren.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil