»   »  ரஜினி சாரை இயக்க பயம் இல்லை, ஆனால்...: கார்த்திக் சுப்புராஜ்

ரஜினி சாரை இயக்க பயம் இல்லை, ஆனால்...: கார்த்திக் சுப்புராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்கப் போவது குறித்து மனம் திறந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

பீட்சா படம் மூலம் இயக்குனர் ஆனவர் கார்த்திக் சுப்புராஜ். காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடிக்க உள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ரஜினி கார்த்திக் சுப்புராஜை தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியை இயக்குவது பற்றி கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது,

சினிமா

சினிமா

என் குடும்பத்தை சேர்ந்த யாரும் சினிமா துறையில் இல்லை. படம் இயக்க வேண்டும் என்ற பேரார்வம் எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் என்பதால் வேலையை விட முடியவில்லை. அதனால் குறும்படம் எடுத்தேன்.

படங்கள்

படங்கள்

தற்போது வரை 4 படங்கள், சில குறும்படங்கள் எடுத்துள்ளேன். எனக்கு என்று ப்ரொபஷனல் குழு உள்ளது. குறும்படத்திற்கு கிடைத்த பாராட்டால் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு நான் இயக்குனர் ஆனேன்.

நடிப்பு

நடிப்பு

ரஜினி சார் ஒவ்வொரு முறையும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ரஜினி சாருடனான படத்தை துவங்க மிகவும் ஆவலாக உள்ளேன். அவருடன் வேலை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

அரசியல்

அரசியல்

அடுத்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். என் பட வேலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ரஜினி சாருடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அவரை இயக்க நான் பயப்படவில்லை. அதே சமயம் நம்பிக்கையுடனும் இல்லை.(லைட்டா பயம்) ஆனால் சிறப்பான படத்தை கொடுப்பேன் என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

English summary
Karthik Subbaraj said in an interview that he is neither scared nor confident about directing a movie with none other than Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X