»   »  நடுத்தெருவுக்கு வந்துட்டேன்னு புலம்பும் ஏஏஏ தயாரிப்பாளர்: சிம்பு என்ன சொல்கிறார்?

நடுத்தெருவுக்கு வந்துட்டேன்னு புலம்பும் ஏஏஏ தயாரிப்பாளர்: சிம்பு என்ன சொல்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்புவால் நடுத்தெருவில் நிற்கிறேன்: ஏஏஏ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்- வீடியோ

சென்னை: நான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார் சிம்பு.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இந்த படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ராயப்பன் சிம்பு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சிம்பு

சிம்பு

சிம்புவால் அனைத்தையும் இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறேன். படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார் ராயப்பன். இது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

பதில்

பதில்

படத்தில் நடிக்கும்போது தயாரிப்பாளர் புகார் தெரிவித்தால் பதில் அளிக்க வேண்டும். ஆனால் படம் முடிந்து ரிலீஸான பிறகு நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார் சிம்பு.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

நான் என் பட தயாரிப்பாளரை பற்றி தவறாக எதுவும் பேச மாட்டேன். தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்டு கொடுத்தால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என எனக்கு தெரியும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

நஷ்டம்

நஷ்டம்

சிம்பு கொடுத்த தொல்லையால் படத்தை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் போனது. படம் தோல்வி அடைந்ததால் ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார் ராயப்பன்.

English summary
Actor Simbu has said that he is not answerable to any after the movie release. He said so after AAA producer Michael Royappan told he lost eveything because of the actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil