»   »  நான் ஒன்னும் புள்ள பெத்துக்கிற மெஷின் இல்லை: நடிகை கோபம்

நான் ஒன்னும் புள்ள பெத்துக்கிற மெஷின் இல்லை: நடிகை கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் ஒன்றும் பிள்ளை பெறும் மெஷின் அல்ல என்று பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் வித்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அதுவும் குறிப்பாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

மருத்துவமனை

மருத்துவமனை

திருமணத்திற்கு பிறகு வித்யா எப்பொழுது மருத்துவமனைக்கு சென்றாலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இதை வித்யாவும் மறுத்து வருவது வழக்கமாகிவிட்டது. அண்மையில் அவர் மருத்துவமனைக்கு சென்றபோதும் அதே செய்தி வெளியாகியதை பார்த்து வித்யா கடுப்பாகிவிட்டார்.

வித்யா

வித்யா

நான் மருத்துவமனைக்கு சென்றால் உடனே கர்ப்பமா? இது என்னுடைய, என் கணவருடைய தனிப்பட்ட விஷயம். எங்களின் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைப்பது சரி அல்ல.

உறவினர்கள்

உறவினர்கள்

அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் கூட கர்ப்பமா என்று கேட்கிறார்கள். திருமணமான அன்று என் அங்கிள் ஒருவர் உங்களை அடுத்த முறை பார்க்கும்போது மூன்று பேராக பார்க்க வேண்டும் என்றார்.

தேனிலவு

தேனிலவு

நாங்கள் தேனிலவுக்கு எங்கு செல்வது என்று தீர்மானிக்கும் முன்பே என் அங்கிள் குழந்தை பற்றி பேசியதால் நான் சிரித்து மழுப்பிவிட்டேன். நானும், என் கணவரும் ஜோடியாக புகைப்படம் எடுக்கும் முன்பு குழந்தையை பற்றி உறவினர்கள் பேசத் துவங்கிவிட்டனர்.

குழந்தை

குழந்தை

ஏன் எப்பொழுது பார்த்தாலும் குழந்தை குழந்தை என்று கேட்கிறார்கள்? நான் ஒன்றும் குழந்தை பெறும் மெஷின் அல்ல. உலக மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிலர் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் நல்லது தான் என்று வித்யா பாலன் தெரிவித்தார்.

English summary
Bollywood actress Vidya Balan said that she is not a baby making machine. Why is it that every time a woman, post marriage, visits a doctor, there are whispers of her pregnancy?, she added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil