»   »  கட்டிப்பிடிப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை - சினேகன் வெளியிட்ட வீடியோ!

கட்டிப்பிடிப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை - சினேகன் வெளியிட்ட வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கட்டிப்பிடிப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை - சினேகன்-வீடியோ

சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நிறைவடைந்தது. நூறு நாட்கள் முடிந்த நிலையில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்.

பலரும் கவிஞர் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்திருந்த நேரத்தில் ஆரவ் தான் வெற்றியாளர் என கமல் அறிவித்தார். சினேகன் இரண்டாமிடத்தை பெற்றார்.

இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சினேகன் ஒரு சில கருத்துகளை வீடியோ மூலம் மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

நன்றி :

நன்றி :

எனக்கு ஆதரவு தந்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. நீங்கள் இத்தனை நாட்கள் ஆதரவு தராமல் வேறு ஒரு களத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னால் 100 நாட்கள் இருந்திருக்க முடியாது.

ஆரவ் வென்றது மகிழ்ச்சி :

ஆரவ் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன். என் குடும்பத்தில் ஒருவன் வெற்றி பெற்றிருக்கிறான். அதில் எந்தவித வருத்தமும் இல்லை.

ஏன் அழுதேன் :

ஏன் அழுதேன் :

நான் அழுதுகொண்டே இருப்பதாகச் சொல்லப்பட்டது. நான் கிராமத்துக்காரன். உணர்வுகளை கண்ணீர் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். உணர்வுகளை எந்த மொழிகொண்டும் மொழிபெயர்க்க முடியாது. மக்கள் இதை எப்படிப் புரிந்துகொள்வார்கள் என அச்ச உணர்வோடுதான் வெளியே வந்தேன்.

பஸ் மறியல் :

பஸ் மறியல் :

ஆனால், எனக்காக டி.வி-யை எல்லாம் உடைத்தார் ஒரு ஆதரவாளர். ஒரு இடத்தில் பஸ் மறியல் கூட நடந்ததாம். இதையெல்லாம் கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

கட்டிப்பிடிக்க போகவில்லை :

கட்டிப்பிடிக்க போகவில்லை :

ஒரு பெண்ணைத் தொடுவதற்கு கூட அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை வரவேண்டும். நாங்கள் அன்பின் வெளிப்பாடாகத்தான் அவர்களை அரவணைத்துக் கொண்டோம். அதையும் சினேகன் கட்டிப்பிடிக்கத்தான் அங்கே போயிருக்கிறான் எனப் பேசினீர்கள். எனக்கு விமர்சனமும் தோல்வியும் புதிதல்ல.

சினேகனை காணவில்லை :

சினேகனை காணவில்லை :

சினேகனை காணவில்லை என நிறைய பேர் சமூக வலைதளங்களில் சொல்லியிருக்கிறார்கள். நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நான் ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என்றுதான் அமைதியாக இருந்தேன்.

அன்பின் எதிரொலி :

அன்பின் எதிரொலி :

தோல்வி அடைந்தால் கூட இந்த அன்பு என்னை மிக உயரத்தில் வைத்திருக்கிறது. வெற்றி பெற்றிருந்தால் கூட இவ்வளவு அன்பை பெற்றிருப்பேனா எனத் தெரியவில்லை. உங்கள் ஆதரவு இருக்கும்வரை ஊர்க்குருவி போல உயர உயரப் பறந்து கொண்டிருப்பேன்.

English summary
The first season of the Biggboss show hosted by KamalHassan in Tamil was completed. Aarav was the winner of seoson 1 based on the votes of viewers. Lyricist Snehan from biggboss home shared a few minutes through the video, who is runner-up in biggboss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil