»   »  என்னை யாரும் கடத்தலை, இது பட விளம்பரத்திற்காக: வரலட்சுமி

என்னை யாரும் கடத்தலை, இது பட விளம்பரத்திற்காக: வரலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலட்சுமி கடத்தப்படவில்லையாம், படத்திற்கு விளம்பரம் தேட இப்படி செய்துள்ளனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவியது. இதை பார்த்த பலரும் வரலட்சுமியை தொடர்பு கொண்டு பேசினர்.

இதையடுத்து விளக்கம் கொடுத்துள்ளார் வரலட்சுமி. இது குறித்து அவர் ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

நலம்

நான் நலமாக உள்ளேன். உங்களின் அக்கறைக்கு நன்றி.. இது எங்கள் படத்தின் விளம்பரத்திற்காக..இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு என ட்வீட்டியுள்ளார் வரலட்சுமி.

தெரியாது

இந்த விளம்பரம் குறித்து எனக்கு தெரியாது. சேவ் சக்தி சார்பில் சட்ட அமைச்சகத்திடம் மனு அளிக்க டெல்லியில் உள்ளேன்... தொல்லைக்கு சாரி..!! என தெரிவித்துள்ளார் வரலட்சுமி.

சர்பிரைஸ்

வரலட்சுமி சரத்குமாரின் பட விளம்பரத்திற்காக அவருக்கு ஸ்வீட் சர்பிரைஸ்... அவருக்கு இது தெரியாது..ஆல் இஸ் வெல், வரலட்சுமி நலமாக உள்ளார் என பிஆர்ஓ நிகில் ட்வீட்டியுள்ளார்.

கடத்தல்

#VaralaxmiGotKidnapped

English summary
Varalakshmi Sarathkumar tweeted about her kidnapping saying that, 'I'm absolutely fine.. thank u for ur concern..it's a part of our movie promotion.. announcement at 6pm..!!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil