»   »  'எத்தன்' நாயகி சனுஷா ரகசிய திருமணம்?

'எத்தன்' நாயகி சனுஷா ரகசிய திருமணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் உன்னி முகுந்தன், எத்தன் நாயகி சனுஷா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக, செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் இந்தத் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று நடிகர் உன்னி முகுந்தன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

I'm Not Marrying Sanusha Santhosh says Unni Mukundan

உன்னி முகுந்தன் குறித்து எழுதாத மலையாளப் பத்திரிக்கைகளே இல்லை என சொல்லும் அளவிற்கு, ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

உன்னி முகுந்தன்- சனுஷா

ரேணிகுண்டா, எத்தன் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சனுஷா. இந்நிலையில் சனுஷா- உன்னி முகுந்தன் இருவரும் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிபடுத்துவது போல இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் வலம்வரத் தொடங்கின.

மறுப்பு

ஆனால் நடிகர் உன்னி முகுந்தன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் " நாங்கள் இருவரும் நடித்து வரும் 'ஒருமுறை வந்து பார்த்தாயா' படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் அது. மற்றபடி திருமணம் குறித்து வெளியான செய்திகள் உண்மையில்லை" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ரம்யா நம்பீசன்

ஏற்கனவே 'இது பதிரமணல்' என்ற படத்தில் நடித்தபோது ரம்யா நம்பீசன்- உன்னி முகுந்தன் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இருவருமே அந்த செய்தி உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

நடிகை வேண்டாம்

மலையாள சினிமாவின் விரும்பப்படும் பேச்சுலர்களில் ஒருவராக உன்னி முகுந்தன் இருப்பதுதான், இந்த தொடர் வதந்திகளுக்கு காரணமாக உள்ளது. ஆனால் கண்டிப்பாக தான் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், மிகவும் எளிமையான பெண் ஒருவரையே மணமுடிப்பேன் என்றும் உன்னி முகுந்தன் தெரிவித்திருக்கிறார்.

English summary
Unni Mukundan, the young actor confirmed that he is not marrying the popular actress Sanusha Santhosh. The actor slammed the wedding rumours through his official Facebook page, recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil