»   »  ச்ச்சீ, என் ஆளு அப்படிப்பட்டவர் இல்லை: பாவனா

ச்ச்சீ, என் ஆளு அப்படிப்பட்டவர் இல்லை: பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கப் போவதாக பாவனா தெரிவித்துள்ளார்.

நடிகை பாவனாவின் மன தைரியத்தை மல்லுவுட் மட்டும் அல்லாது கோலிவுட், சாண்டல்வுட்டும் பாராட்டுகிறது. பாவனாவுக்கும், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

திருமணம்

திருமணம்

ஜனவரி மாதம் எனக்கும், நவீனுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாவனா தெரிவித்துள்ளார்.

நவீன்

நவீன்

நவீன் என்னை நன்கு புரிந்து வைத்துள்ளவர். நான் எதை செய்தாலும் எனக்கு ஆதரவாக இருப்பவர். பெண்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளவர். அதனால் தான் அவரை எனக்கு பிடித்துள்ளது என்கிறார் பாவனா.

படம்

படம்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால் என்னை தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன். என் கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்று பாவனா கூறியுள்ளார்.

மல்லுவுட்

மல்லுவுட்

மலையாள திரையுலகில் ஆணாதிக்கம் அதிகம். அங்கு நடிகர், நடிகைகளை ஒரே மாதிரியாக நடத்த மாட்டார்கள் என்று பாவனா தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

English summary
Bhavana, the charming actress is all set to tie the knot with longtime boyfriend Naveen. She stated that she has absolutely no plans to quit the films post marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil