»   »  கலாபவன் மணியின் மரணத்திற்கு நான் காரணம் இல்லீங்கோ: கதறும் மலையாள நடிகர் சாபு

கலாபவன் மணியின் மரணத்திற்கு நான் காரணம் இல்லீங்கோ: கதறும் மலையாள நடிகர் சாபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு தான் காரணம் அல்ல என்று மலையாள நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான தரிகிட சாபு தெரிவித்துள்ளார்.

நடிகர் கலாபவன் மணி கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் மரணம் அடைந்தார். அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்ததால் அவரது கல்லீரல் பாதிப்பு அடைந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணியின் மரணத்திற்கு நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான தரிகிட சாபு தான் காரணம் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல் தீயாக பரவியது.

மணி கொலை

மணி கொலை

கலாபவன் மணியின் மரணம் இயற்கை அல்ல அது திட்டமிட்ட கொலை. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் அவரை தரிகிட சாபு சந்தித்து அவருக்கு மது அளித்துள்ளார் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவியது.

சாபு

சாபு

வாட்ஸ்ஆப் செய்தியை பார்த்த சாபு கூறுகையில், நான் மணியை சந்தித்தது உண்மை தான். ஆனால் நாங்கள் மது அருந்தவில்லை. நான் மணியின் வீட்டில் இருந்து காலை 11 மணிக்கே கிளம்பிவிட்டேன் என்றார்.

நான் இல்லை

நான் இல்லை

கலாபவன் மணியின் மரணத்திற்கு நான் காரணம் இல்லை. நான் சும்மா தான் அவரை சந்தித்து பேசினேன். உடனே அவர் மரணத்திற்கு நான் தான் காரணம் என்கிறார்கள் என சாபு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பு

தயாரிப்பு

தரிகிட சாபு முதன் முதலாக தயாரித்த படம் கிடப்பில் போடப்பட்டதற்கு கலாபவன் மணி தான் காரணம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடையே சண்டை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tharikida Sabu, the actor-television anchor bitterly slammed the rumours regarding his connection with Kalabhavan Mani's death. Sabu stated that he has absolutely no connection with Mani's death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil