»   »  அஜீத்தை வச்சு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சுசீந்திரன்

அஜீத்தை வச்சு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சுசீந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன? இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்- வீடியோ

சென்னை: அஜீத்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

பைனான்ஸியர் என்ற பெயரில் அன்புச்செழியன் செய்த அடாவடியால் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அன்புச்செழியனின் முகத்திரையை கிழித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

அஜீத்தையும் அன்புச்செழியன் மிரட்டியதாக சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

நான் கடவுள் படத்தின்போது அன்புச்செழியன் அஜீத்தை மிரட்டியதாகவும் அவரும் அசோக்கின் மனநிலைமையில் இருந்ததாகவும் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இதை பார்த்தவர்கள் என்ன அஜீத் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறீர்களா என்று சுசீந்திரனிடம் கேட்டனர்.

தேவையில்லை

தேவையில்லை

அஜீத் பெயரை சொல்லி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அன்புச்செழியன் பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்தே இதை எல்லாம் கூறுகிறேன் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

அன்பு

அன்பு

அன்புச்செழியன் மட்டும் அல்ல நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார். அஜீத் மட்டும் அல்ல இயக்குனர்கள் லிங்குசாமி, கவுதம் மேனனும் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் சுசீந்திரன்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

திரையுலகினரை ஆட்டிப் படைக்கும் அன்புச்செழியனை கைது செய்து அவரின் அடாவடித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளது கோலிவுட்.

English summary
Director Suseenthiran said that he is not using Ajith's name for publicity. All he wants is to expose the financier Anbu Chezhiyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil