»   »  தெறி 2ம் பாகத்தில் நடிக்க நான் ரெடி: காமெடி பண்ணும் பவர்ஸ்டார்

தெறி 2ம் பாகத்தில் நடிக்க நான் ரெடி: காமெடி பண்ணும் பவர்ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க தான் தயார் என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

I'm ready to do Theri part-2: Powerstar

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ராதிகா, பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்த தெறி படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ரிலீஸானது. படம் தமிழகம் தவிர கேரளாவிலும் சக்கை போடு போடுகிறது. விஜய்யை அவரது ரசிகர்கள் வசூல் மன்னன் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் பவர்ஸ்டார் ட்விட்டரில் தெறி பற்றி காமெடி செய்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,இயக்குனர் அட்லீ கேட்டுக் கொண்டால் தெறி பார்ட் 2ல் நடிக்க நான் ரெடி என தெரிவித்துள்ளார்.


தெறி படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அவர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் வேளையில் பவர்ஸ்டாருக்கு இப்படி ஒரு ஆசை வந்துள்ளது. முடிவு அட்லீ கையில்!!!


English summary
Powerstar Srinivasan tweeted that, 'I am ready to do #Theri part-2 if approached Atlee_dir'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos