»   »  நடிகை கடத்தல் வழக்கு: பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த நடிகர்

நடிகை கடத்தல் வழக்கு: பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை கடத்தல் விவகாரத்தில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க உண்மையை கண்டறியும் சோதனை உள்ளிட்ட எந்த சோதனையும் செய்ய தயார் என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டதற்கு மலையாள நடிகர் திலீப் தான் காரணம் என்று பல நாட்களாக கிசுகிசுக்கிறார்கள். நான் ஒன்றும் செய்யவில்லை என்று திலீப் கதறினாலும் கேட்பார் இல்லை.

இந்நிலையில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

நன்றி

நன்றி

இந்த இக்கட்டான சூழலில் எனக்கு ஆதரவாக உள்ள நடிகர்கள் சலீம் குமார் மற்றும் அஜு வர்கீஸுக்கு என்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்பொழுதுமே நல்லதையே நினைத்து நல்லதையே செய்பவன்.

இமேஜ்

இமேஜ்

சில குரூப்களும், சில ஆன்லைன் மீடியா சைட்டுகளும் சேர்ந்து என் இமேஜை கெடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். நான் செய்யாத குற்றத்திற்கு என் மீது பழி சுமத்துகிறார்கள்.

இல்லை

இல்லை

என் மீது பழி சுமத்துபவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எனக்கும், எந்த கேஸுக்கும் தொடர்பு இல்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க உண்மையை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் நான் தயார் என தெரிவித்துள்ளார் திலீப்.

மிரட்டல்

மிரட்டல்

ரூ. 1.5 கோடி கொடுக்காவிட்டால் நடிகையின் விஷயத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று அனைவரிடமும் கூறுவேன் என விஷ்ணு என்பவர் திலீப்பை மிரட்டிய நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

English summary
Malayalam actor Dileep has posted on his Facebook page that he is ready to undergo brain mapping, narco analysis, lie detection or anything to prove his innocence in a famous actress' abduction case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil