»   »  அய்யோ என் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன், எப்படி சொல்வேன்: தமன்னா

அய்யோ என் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன், எப்படி சொல்வேன்: தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி போன்ற படத்தில் நடித்துள்ள நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. என் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன் என தமன்னா தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் தமன்னா துணிச்சலாக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

நம்பிக்கை

நம்பிக்கை

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் என் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என்னாலும் திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

கனவு

கனவு

பாகுபலி படத்தில் நடித்தது கனவு போன்று உள்ளது. சண்டை காட்சிகளில் நடிக்க சிறப்பு பயிற்சி எடுத்தேன். சண்டை காட்சிகளில் நடித்ததை ஒருபோதும் மறக்க முடியாது.

பாகுபலி

பாகுபலி

இனி நான் எத்தனை படங்களில் நடித்தாலும் பாகுபலி படத்தில் நடித்த அனுபவங்கள் என் மனதை விட்டு போகாது. இந்த படம் மூலம் வித்தியாசமான பாதையை காட்டிய ராஜமவுலி சாருக்கு என் நன்றி.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

பாகுபலி போன்ற படத்தை எடுப்பது மிகவும் கஷ்டம். அப்படிப்பட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். என் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன் என தமன்னா தெரிவித்துள்ளார்.

English summary
Tamanna said that she is really really lucky to act in a magnum opus like Baahubali. She has thanked director Rajamouli for giving this wonderful opportunity.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil