»   »  நான் இன்னும் சாகல, உயிரோட தான் இருக்கேன்: பிரபல டிவி நடிகை விளக்கம்

நான் இன்னும் சாகல, உயிரோட தான் இருக்கேன்: பிரபல டிவி நடிகை விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் இன்னும் சாகவில்லை என்று தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் திவ்யங்கா திரிபாதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏ ஹை மொஹப்பத்தேன் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் திவ்யங்கா திரிபாதி. அவர் அதே தொடரில் நடித்து வரும் விவேக் தாஹியாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நாச் பாலியே நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் திவ்யங்கா.

 வதந்தி

வதந்தி

கணவர், தொலைக்காட்சி தொடர் என்று பிசியாக இருக்கிறார் திவ்யங்கா. இந்நிலையில் திவ்யங்கா இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. அந்த வதந்தி திவ்யங்காவின் காதுகளுக்கும் சென்றது.

திவ்யங்கா

யாரோ நான் இறந்துவிட்டதாக செய்தி பரப்பியுள்ளனர். நான் உயிருடன் தான் உள்ளேன். இது போன்ற வதந்திகளால் என் நண்பர்கள், குடும்பத்தாருக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று திவ்யங்கா ட்வீட்டியுள்ளார்.

 ரசிகர்கள்

ரசிகர்கள்

திவ்யங்காவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வதந்தி செய்தி கேட்டு அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தான் திவ்யங்கா ட்விட்டரில் விளக்கம் அளித்தார்.

பாலிவுட்

பாலிவுட்

பிரபலம் ஒருவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது இது ஒன்றும் முதல் முறை அல்ல. பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான் ஆகியோர் இறந்துவிட்டதாகக் கூட வதந்தி பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Television actor Divyanka Tripathi took to twitter to clarify that she is still alive and not in RIP mode.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil