»   »  இன்று இரவு நான் செம ஹேப்பி - எமி ஜாக்சன் ட்வீட்!

இன்று இரவு நான் செம ஹேப்பி - எமி ஜாக்சன் ட்வீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ் : 'சூப்பர் கேர்ள்' எனும் அமெரிக்க சீரியல் உலகம் முழுவதும் பிரபலம். இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் புதிய சீசனில் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.

'மதராசப்பட்டினம்' படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் 'ஐ' படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். இவர் தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக '2.O' படத்தில் நடித்துள்ளார்.

I'm super happy tonight, says Amy jackson

பிரிட்டன் மாடலாகவும் வலம் வரும் இவர் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து அவர்களின் புதிய வியாபாரப் பொருட்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருந்து வருகிறார். தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களில் கமிட்டான எமி, சில நாட்களுக்கு இந்திய சினிமாவில் இருந்து விடைபெற்று ஹாலிவுட் சீரியல்களில் தலைக்காட்ட முடிவெடுத்தார்.

அதன் முதல் கட்டமாக 'சூப்பர் கேர்ள்' சீரியலில் நடித்தார், அந்த சீரியலின் முதல் எபிசோட் இன்று இரவு ஒளிப்பரப்பாக இருக்கிறது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இந்த இரவு எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'சூப்பர் கேர்ள்ஸ்' டிவி சீரியலில் எமி ஜாக்சன் திடீரென பிஸியாகி விட்டதால், 'பட்டர்ஃப்ளை' கன்னடப் படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

English summary
'Super Girl' american serial starring Amy Jackson's first episode will be broadcast today. Amy Jackson said that information on twitter page and mentioned 'This night was very special to me'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil