»   »  நான் ரொம்ப கோபக்காரன், அரசியலுக்கு லாயக்கில்லாதவன்: கமல் ஹாஸன்

நான் ரொம்ப கோபக்காரன், அரசியலுக்கு லாயக்கில்லாதவன்: கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் மிகவும் கோபக்காரன். நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். அவரது ட்வீட்டுகளை பார்த்து ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் பிரபல ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

கிரிமினல்

கிரிமினல்

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட சசிகலாவின் குடும்பம் என்னும் கிரிமினல் கும்பலால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் தான் இந்த மிஸ்டர் பழனிச்சாமி.

உண்மை

உண்மை

நான் சொல்வது எல்லாம் உண்மை. இதை நீதிமன்றமே உறுதிபடுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூடத் தான் குற்றவாளி. தேர்தல் வரட்டும் மக்கள் தங்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவார்கள்.

அரசியல்

அரசியல்

நான் அரசியலுக்கு வர லாயக்கில்லாதவன். நான் மிகவும் கோபமாக்காரன். கோபக்கார அரசியல்வாதிகள் தேவை இல்லை. நிதானமான அரசியல்வாதிகளே தேவை. தற்போது நானும் சரி, மக்களும் சரி கோபமாக உள்ளோம் என கமல் தெரிவித்துள்ளார்.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

தமிழக அரசியல் சூழல் குறித்து கமல் மட்டும் அல்ல நடிகைகள் ஸ்ரீப்ரியா, ரஞ்சனி, குஷ்பு, நடிகர்கள் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த் ஆகியோரும் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Kamal Haasan said that he is unfit for politics as he is very angry and people need politicians with great balance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil