twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்டர், கைதில இதையெல்லாம் ஒழுங்கா பண்ணி இருக்கலாம்... லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!

    |

    சென்னை : மாநகரம்,கைதி,மாஸ்டர் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கநகராஜ்

    கமல்ஹாசன், விஜய் சேதுபதி,பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தை தற்போது இயக்கியுள்ளார்

    இந்த நிலையில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மாஸ்டர், கைதில இதையெல்லாம் ஒழுங்கா பண்ணி இருக்கலாம் என்று தோன்றுகிறது என பேசியுள்ளார்.

    ரூ.1 சம்பளம்.. அண்ணாமலையின் புது அவதாரம் .. டிராண்டாகும் புகைப்படம் !ரூ.1 சம்பளம்.. அண்ணாமலையின் புது அவதாரம் .. டிராண்டாகும் புகைப்படம் !

    குறும்படங்களின் மூலம் இயக்குனருக்கான

    குறும்படங்களின் மூலம் இயக்குனருக்கான

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு தமிழில் இப்பொழுது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலம் ரசிகர்களை பிரமிக்க வைத்து வரும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். எந்த ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றாமல் குறும்படங்களின் மூலம் இயக்குனருக்கான தகுதியை ஏற்படுத்திக் கொண்ட லோகேஷ் க்கு மாநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

    தந்தைக்கும் மகளுக்குமான இடையே

    தந்தைக்கும் மகளுக்குமான இடையே

    மாநகரம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி என்ற மெகா ஹிட் வெற்றிப் படத்தை இயக்கினார். கைதி படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் தந்தைக்கும் மகளுக்குமான இடையே உள்ள பாசத்தை மட்டும் கொண்டு வெளியான இந்த திரைப்படம் இப்போது இந்தியில் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் கைதி படம் சீனா மற்றும் ரஷ்ய மொழிகளிலும் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது

    விக்ரம் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

    விக்ரம் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

    விஜய் மற்றும் விஜய் சேதுபதியை இணைய வைத்த மாஸ்டர் முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் வெளியானது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி ரோலில் மிரட்டலான வில்லனாக நடித்து கலக்கி இருப்பார். மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூலையும் அள்ளியது. இப்போது தனது கலையுலக குருவான கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

    மாஸ்டர், கைதி நன்றாக எடுத்திருக்கலாம்

    மாஸ்டர், கைதி நன்றாக எடுத்திருக்கலாம்

    இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலின் நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் படத்தை எடுப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தால் அந்த படத்தை மேலும் நன்றாக எடுத்திருக்கலாம் என தோன்றுகிறது என்றார். அதை போல கைதி படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என தோன்றுகிறது என்றார். மாஸ்டர் படத்தை கொஞ்சம் டைம் எடுத்து இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம் இரண்டாவது பாதி நீளத்தை குறைத்திருக்கலாம் என தனது ஒவ்வொரு படங்களிலும் தான் கண்ட குறைகளை வெளிப்படையாக அந்த நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    English summary
    I might have done master and kaithi movie even more better says lokesh kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X