»   »  பொங்கலைக் குறி வைக்கும் "ஐ"... அட்வான்ஸ் புக்கிங் அபாரமாம்... உற்சாகத்தில் "சீயான்" ரசிகர்கள்!

பொங்கலைக் குறி வைக்கும் "ஐ"... அட்வான்ஸ் புக்கிங் அபாரமாம்... உற்சாகத்தில் "சீயான்" ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் - அமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள ஐ படத்தின் ரிலீஸுக்காக தமிழகமெங்கும் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். கடைசி நேர இழுபறிகளைத் தாண்டி, ஜனவரி 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தற்போது அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலும், கேரளாவிலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக கேரளாவில் நல்ல எதிர்பார்ப்பு காணப்படுகிறதாம்.


கேரளாவில் இப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு 232 திரைகளில் ரிலீஸாகிறதாம். இதுகுறித்து இப்படத்தை விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுள்ள குளோபல் யுனைட்டெட் மீ்டியா நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், ஜனவரி 14ம் தேதி மிகப் பெரிய அளவில் ஐ ரிலீஸாகிறது. இதுவரை கேரளாவில் எந்த மொழிப் படத்திற்கும் இல்லாத வகையில் அதிக அளவாக 232 திரைகளில் ஐ ரிலீஸாகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 400

தமிழகத்தில் 400

தமிழகத்தைப் பொறுத்தவரை 400 திரைகளில் இப்படம் ரிலீஸாகிறது. பொங்கலுக்கு ஐ தவிர ஆம்பள, டார்லிங் என இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இந்த மூன்றில் ஐ படத்திற்குத்தான் மிகப் பெரிய எதிர்பாப்பு உள்ளது.


அமெரிக்காவில்

அமெரிக்காவில்

அமெரிக்காவிலும் இப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் அதிகபட்ச திரைகளில் இப்படம் ரிலீஸாகிறதாம்.


தமிழ், தெலுங்கு, இந்தியில்

தமிழ், தெலுங்கு, இந்தியில்

ஐ படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் டப் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வெளிமாநிலங்களில்

வெளிமாநிலங்களில்

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஐ பொங்கலுக்கு வெளியாகிறது. இதுதவிர இங்கிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் திரைக்கு வருகிறது.


ஜனவரி 16ல் இந்தி

ஜனவரி 16ல் இந்தி

ஜனவரி 16ம் தேதி இந்திப் பதிப்பை திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இப்படத்தின் பிரீமியர் ஷோ ஜனவரி 15ம் தேதி இடம் பெறுகிறதாம்.


அட்வான்ஸ் புக்கிங்குக்கு நல்ல வரவேற்பு

அட்வான்ஸ் புக்கிங்குக்கு நல்ல வரவேற்பு

ஐ படத்தின் முன்பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் முதல் நாளிலேயே ஐ படத்திற்குப் பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்கிறார்கள்.


பட்டையைக் கிளப்பிய டிரெய்லர்

பட்டையைக் கிளப்பிய டிரெய்லர்

ஏற்கனவே ஐ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர், பாடல்கள் ஆகியவை பிரபலாகி விட்டன. பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விட்டன என்பது நினைவிருக்கலாம்.


முதல் வாரத்திலேயே கல்லா கட்டுமா

முதல் வாரத்திலேயே கல்லா கட்டுமா

பொங்கலையொட்டி அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக இருப்பதால் முதல் வாரத்திலேயே ஐ பிரமாதமாக கல்லா கட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிபாஷாவை பீட் செய்வாரா விக்ரம்

பிபாஷாவை பீட் செய்வாரா விக்ரம்

இந்தியில் ஐ படம் ரிலீஸாகும் அதே நேரத்தில்தான் பிபாஷா பாசுவின் அலோன் படமும் திரைக்கு வருகிறது. பிபாஷா படத்தை ஐ பீட் செய்யுமா என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.


English summary
Vikram-Amy Jackson starrer "I" is all set for a massive release worldwide on 14 January. The blockbuster will be having a record release in Kerala, which is one of the key markets for Tamil films.It will be releasing in 232 screens in the state. In Tamil Nadu, "I" is expected to be released in about 400 screens, considering that there are few other films slated for Pongal release. The Vikram-starrer will be getting big screens in the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil