இதெல்லாம் மாறுற வரை நானும் மாற மாட்டேன்...அடம்பிடிக்கும் ப்ளூசட்டை மாறன்

சென்னை : சினிமாக்களை விமர்சித்து வந்த ப்ளூசட்டை மாறன், இப்போது சினிமா நடிகர்,டைரக்டர்கள் என ஒருவர் விடாமல் விமர்சித்து வருகிறார். எந்த பிரபலம் அல்லது எந்த படம் பற்றிய அறிவிப்பு வந்தாலும் உடனே அதை வைத்து ட்வீட் போட்டு விடுகிறார்.

இதை சம்பந்தப்பட்ட பிரபலத்தின் ரசிகர்கள் மட்டுமல்ல, நெட்டிசன்களும் கண்டபடி கழுவி ஊற்றி வந்தாலும் அவர்களையும் சேர்த்து விமர்சிக்கிறாரே தவிர, ட்வீட் போடுவதை மட்டும் மனுஷன் குறைக்கவோ, நிறுத்தவோயில்லை.

ப்ளூ சட்டை மாறன் விமர்சிக்கும் பிரபலங்களின் லிஸ்ட்டில் ரஜினியை தொடர்ந்து அடுத்தாதாக வந்திருப்பது தனுஷ். தனுஷின் முதல் படத்தையும் கடைசியாக அவர் நடித்துள்ள தி கிரே மேன் பட போஸ்டர்களையும் இணைத்து மீம்ஸ் போட்டுள்ளார்.

 நானும் மாற மாட்டேன்

நானும் மாற மாட்டேன்

இந்த சமயத்தில் நெட்டிசன் ஒருவர், மாறன்...உங்கள் பதிவுகளில் அதிக நெகடிவிட்டி உள்ளது என கமெண்ட் செய்துள்ளார். இந்த வாசகத்தை குறிப்பிட்டு, நடிகர் செந்தில் வாயில் ரத்தம் வழிய, கோபமாக முறைத்து பார்த்தபடி இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்து, 'போஸ்டர்ல கத்தி, துப்பாக்கிக்கு பதிலா பூவும், புன்னகையும். படத்துல ஹார்பர் ஹெராயின் கடத்தலுக்கு பதிலா அழகிய ரொமான்ஸ் மூலம் இதயத்தை கடத்துதல்னு பாசிட்டிவா கதை & கேரக்டர்கள் மாறும்வரை நானும் மாற மாட்டேன்'என ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

இதற்கு நெட்டிசன்கள், டேய் அறிவு கெட்டவனே கத்தி துப்பாக்கி இரண்டையுமே வச்சு யாரையும் நிஜத்துல குத்திக் கொல்லவில்லை, ஆனா நீ அப்படி இல்ல எப்ப பார்த்தாலும் எவனாவது ஒருத்தன வம்பு இழுத்துட்டு இருக்க, எவனாவது உன்னை மதிக்கிறானா பாத்தியா,பார்த்திபன் சார் தான் உன்ன மதிச்சாரு, ஆனா நீ அவரையும் விட்டு வைக்கல.அந்த மாதிரி படம் நீயே எடுக்கலாமே. ஓடுதான்னு பாக்கலாம். ஆன்டி இந்தியன்னு ஒரு காவியத்த எடுத்தியே கண்டறாவி...கழுவி கழுவி ஊத்தியும் இன்னும் அடங்க மாட்றியே.

நல்ல கதையா நீ எடு

நல்ல கதையா நீ எடு

நல்ல கதையா எடு. நீயும் படம் பண்ணி காமி. எல்லோரும் அப்போ ஒத்துகிறோம் நீ சொல்றது சரிதான்னு. ரொமான்டிக்கா, லவ் படம் எடுத்தா லூசு ஹீரோ இல்லைன்னா லூசு ஹீரோயின்னு சொல்ல வேண்டியது. ஆக்ஷன், த்ரில்லர்ன்னு எடுத்தா வயலன்ஸ் ஓவரா இருக்குன்னு சொல்ல வேண்டியது. நீங்க நினைக்கிற மாதிரியே எல்லோரும் படம் எடுக்கனும்னு நினைக்கிறது முட்டாள் தனம் என கண்டபடி திட்டி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

மாற வாய்ப்பே இல்லை போல

மாற வாய்ப்பே இல்லை போல

மொத்தத்துல நான் மாறவே மாட்டேன். இப்படியே யார் என்ன பண்ணினாலும் விமர்சித்து கொண்டே தான் இருப்போன்னு அவரே பிடிவாதமாக சொல்லிட்டாரே. இனி இவரை என்ன சொல்லி திட்டினாலும் வேஸ்ட். தான் திருந்தாத ஜென்மம் என்பதை அவரே ஒப்புக் கொண்டார் என நெட்டிசன்கள் சிலர் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X