»   »  ஓவியாவுக்கு உதவினேன், ஆனாலும் நான் தான் கெட்டவள்னு திட்டுகிறார்கள்: காயத்ரி

ஓவியாவுக்கு உதவினேன், ஆனாலும் நான் தான் கெட்டவள்னு திட்டுகிறார்கள்: காயத்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஓவியாவுக்கு உதவி செய்துள்ளேன். என் கேரக்டரை இப்படி மோசமாக்கி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் பலருக்கும் பிடிக்காத ஆள் காயத்ரி ரகுராம். அவர் கெட்ட வார்த்தை பேசியது பார்வையாளர்களை எரிச்சல் அடைய வைத்தது.

இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கேரக்டர்

கேரக்டர்

பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களில் என்னை தான் கெட்டவளாக காட்டியுள்ளனர். நான் ஓவியாவுக்கு உதவி செய்துள்ளேன். என் கேரக்டரை இப்படி மோசமாக்கி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

ஓவியா

ஓவியா

நான் ஜூலியையோ, ஓவியாவையோ கார்னர் செய்தது இல்லை. அவர்களுக்கு உதவி தான் செய்துள்ளேன். ஓவியாவுக்கு எப்பொழுது உதவி தேவைப்பட்டாலும் ஒரு சகோதரியாக செய்ய நான் தயாராக உள்ளேன்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் என் நண்பர்களாகிவிட்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. பிக் பாஸ் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பேன்.

பிக் பாஸ் டைட்டில்

பிக் பாஸ் டைட்டில்

ஆரவ் அமைதியான, பொறுமையான ஆள். அவருக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைத்தது சரியே. அவர் பல கஷ்டங்களை அனுபவித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரிடமும் நற்பெயர் எடுத்தார். எங்கள் அனைவருக்கும் அவரை பிடிக்கும்.

லிமிட் உண்டு

லிமிட் உண்டு

சுதந்திர நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு சரி என்று படாததை செய்தவரை விமர்சிக்கலாம். மற்றவர்களை வறுத்தெடுப்பதற்கும் ஒரு அளவு உண்டு.

திட்டு

திட்டு

இதில் விந்தை என்னவென்றால் நான் கெட்ட வார்த்தை பேசினேன் என்று என்னை மன்னிக்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தையால் திட்டுகிறார்கள் என்று காயத்ரி தெரிவித்துள்ளார்.

English summary
Gayathri Raghuram said that she never cornered Oviya in the Bigg Boss house but lent a helping hand to her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X