»   »  விக்னேஷ் சிவனுக்கு எதிராக ரசிகர்களைத் தூண்டிவிட்டாரா சிம்பு?

விக்னேஷ் சிவனுக்கு எதிராக ரசிகர்களைத் தூண்டிவிட்டாரா சிம்பு?

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

வாரா வாரம் ஒரு சர்ச்சையை கிளப்பிவிடும் சிம்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த வார டாபிக் விக்னேஷ் சிவன்.

சிவகார்த்திகேயன் நடிக்க அனிருத் இசையமைக்கும் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் டைட்டில் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் இணையவிருப்பதும் அறிவிக்கப்பட்டது.

I never forget Simbu's help, says Vignesh Sivan

இதில் பேசும்போது விக்னேஷ் சிவன் சொன்ன வார்த்தைகள் தான் சிம்பு ரசிகர்களின் கோபத்துக்கு அடிபோட்டது. ‘என்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய அனிருத்துக்கு நன்றி,' என்று விக்னேஷ் சிவன் பேசினார்.

விக்னேஷ் சிவன் அறிமுகமானது சிம்பு நடித்த 'போடா போடி' படத்தில். அந்தப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அதில் மூன்று பாடல்களையும் எழுதியிருந்தார். எனவே நன்றி மறந்துவிட்டார் விக்கி என்ற ரீதியில் சிம்புவின் ரசிகர்கள் கிளம்பிவிட்டனர்.

இதற்கு இப்போது விளக்கம் கொடுத்துள்ளார். ‘எனக்கு முதல் வாய்ப்பு தந்தது சிம்பு தான் அதை என்றுமே மறக்க மாட்டேன். ஆனால் போடாபோடிக்கு பிறகு அடுத்த படம் கிடைக்காமல் வலிகளோடு காத்திருந்தபோது அழைத்து பாட்டு எழுதும் வாய்ப்பு தந்தவர் அனிருத். அந்த துன்பமான காலகட்டத்தில் சிம்பு உட்பட பல நண்பர்கள் உதவி செய்தனர். அனிருத் அப்போது வாய்ப்பு வழங்கியதோடு ஒரு குடும்ப நண்பராகவும் எனக்கு உதவினார். எனவே தான் அவருக்கு அங்கே நன்றி கூறினேன்.

ரெமோ நிகழ்ச்சி மிகவும் சிறிய விஷயம். அங்கே ஒரு சில வார்த்தைகள் தான் பேச முடிந்தது. என் தாய், தந்தைக்கு கூட நன்றி தெரிவிக்கவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளட்டும். எனக்கும் சிம்புவுக்குமான நட்பை கெடுக்க முயற்சிக்க வேண்டாம்,' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

English summary
Director Vignesh Sivan says that he never forget Simbu's help to him during his hard days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil