“முக்கோண விதி, தொடர்பியலை நான் உணர்ந்ததில்லை.. ஆனால், கர்மா...?: ஜீவி2 ஹீரோ சொல்ல வர்றது இதுதான்!

சென்னை: வெற்றி நடிப்பில் 2019ல் வெளியான ஜீவி திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றியுடன் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகியிருந்தது.

'ஜீவி' இரண்டாம் பாகத்தை, விஜே கோபிநாத் இயக்கியுள்ளார், இந்தப் படம் வரும் 19ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

முக்கோணவிதி, தொடர்பியல், ஜீவி

முக்கோணவிதி, தொடர்பியல், ஜீவி

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதாவது கிடைக்கும் மிக வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக, 2019ல் வெளியானது ஜீவி திரைப்படம். விஜே கோபிநாத் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதையை பாபு எழுதியிருந்தார். வெற்றி ஹீரோவாகவும், கருணாகரன், ரோகிணி, அஸ்வினி சந்திரசேகர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முக்கோண விதி, தொடர்பியல் என புதுமையான கதைக்களத்தில் வெளியான ஜீவி, ரசிகர்களை வியக்க வைத்தது.

ஜீவி 2 இரண்டாம் பாகம்

ஜீவி 2 இரண்டாம் பாகம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரானது ஜீவி டீம். கதை எழுதிய பாபு, முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மலையாள நடிகர் அணில் முரளி இருவரை தவிர, முதல் பாகத்தில் பணிபுரிந்த அனைவரும் 2ம் பாகத்திலும் நடித்துள்ளனர். அதேநேரம், மறைந்த அணில் முரளிக்கு பதிலாக, நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் நடித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜீவி2

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜீவி2

'மாநாடு' படத்தை தொடர்ந்து, சுரேஷ் காமாட்சி ஜீவி 2 படத்தை தயாரித்துள்ளார். சூட்டிங் முடிந்துவிட்ட இந்தப் படம், வரும் 19ம் தேதி நேரடியாக 'ஆஹா' ஓடிடியில் வெளியாகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் விறுவிறுப்பான திரைக்கதையில் சூப்பர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜாலியாக நடிக்க ஆசை தான்!

ஜாலியாக நடிக்க ஆசை தான்!

இந்நிலையில், 'ஜீவி2' படத்தில் நடித்தது குறித்து பேசிய நாயகன் வெற்றி, "நாலு நண்பர்கள், ஒரு காதலி, டூயட் என வலுவான கதையும் இருந்தால், அதிலும் நடிக்க தயாராக இருப்பதாகவும், தற்போது நடித்துவரும் பம்பர் அப்படிப்பட்ட ஒன்றுதான்" எனவும் கூறினார். மேலும், "ஜீவி படத்தில் இடம் பெற்றுள்ளது போல முக்கோண விதி, தொடர்பியல் போன்ற விஷயங்களை நான் உணர்ந்ததில்லை. ஆனால், கர்மா இருப்பதையும் தவறு செய்தால் அது நம்மை திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஜீவி 3ம் பாகம்.

ஜீவி 3ம் பாகம்.

தொடர்ந்து பேசிய வெற்றி, "ஜீவி2 முடிந்ததுமே மூன்றாம் பாகம் உருவாகுமா? என பலரும் கேட்கின்றனர். இந்த படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும் விமர்சனங்களும் தான் அதை முடிவுசெய்யும். இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால் அது 3ம் பாகமா என்பது தெரியாது" என சஸ்பென்ஸ் வைத்துள்ளார் நடிகர் வெற்றி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X