»   »  அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன்

அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்துவிட்டதாக ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

அஜீத், பார்த்திபன், தேவயாணி உள்ளிட்டோரை வைத்து நீ வருவாய் என படத்தை எடுத்தவர் இயக்குனர் ராஜகுமாரன். அதன் பிறகு அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் ஆகிய படங்களை இயக்கினார்.

அவரின் மூன்று படங்களிலும் ஹீரோயினாக நடித்த தேவயாணியையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமதி தமிழ்

திருமதி தமிழ்

ராஜகுமாரன் பல ஆண்டுகள் கழித்து தனது மனைவியை ஹீரோயினாக போட்டு தானே ஹீரோவாக நடித்து இயக்கிய படம் திருமதி தமிழ். படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.

நடிப்பு

நடிப்பு

சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ராஜ் என்ற கதாபாத்திரத்தில் வந்து காமெடி செய்தார் ராஜகுமாரன். அதன் பிறகு தற்போது கடுகு படத்தில் நடித்து வருகிறார்.

ராமராஜன் சட்டை

ராமராஜன் சட்டை

பல நடிகர்கள் ராமராஜன் போன்று பளிச் சட்டை அணிய விரும்ப மாட்டார்கள். ஆனால் என் படங்களில் சரத்குமார், விக்ரம், அஜீத் ஆகியோரை ராமராஜன் மாதிரி ரோஸ் கலர் சட்டை போட வைத்துவிட்டேன். அஜீத் சாருக்கு அந்த சட்டை மிகவும் அழகாக இருந்தது என்று ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

அஜீத்

அஜீத்

வேட்டி அணிந்து, ரோஸ் கலர் சட்டையில் பார்த்த அந்த கிராமத்து அஜீத்தை தற்போது பார்க்க முடியுமா? அதன் பிறகும் அஜீத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் தான் அவரை இயக்க மறுத்துவிட்டேன் என்கிறார் ராஜகுமாரன்.

English summary
Rajakumaran said that though he got an opportunity to direct Ajith again, he refused to accept it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil