»   »  நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்

நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றிருக்கக் கூடாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத் சென்ற இடத்தில் டிவி 9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார் தனுஷ். அப்போது சுசீலீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை பற்றி கேள்வி கேட்டதும் கோபித்துக் கொண்டு பாதியிலே கிளம்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து தனுஷ் தற்போது கூறியிருப்பதாவது,

அமைதி

அமைதி

பேட்டியின்போது நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. பொதுவாக நான் அமைதியான ஆள். ஆனால் நான் எப்படி நடந்திருக்கக் கூடாதோ அப்படி நடந்துவிட்டேன்.

கேள்வி

கேள்வி

பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்காக நான் இப்படி நடந்திருக்கக் கூடாது தான். என் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அந்த பேட்டியில் நான் நடந்து கொண்ட விதத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது. வேறு கேள்வி கேட்குமாறு பேட்டி எடுத்தவரிடம் நான் கூறியிருக்க வேண்டும் என்றார் தனுஷ்.

விஐபி 2

விஐபி 2

தனுஷ் நடிகை கஜோல் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush said that he shouldn't have walked out of the interview after he was asked about Suchileaks and family issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X