»   »  சொந்த வீட்டிலேயே திருடும் அஜீத் வில்லன்: அப்படி எதை திருடுகிறார் தெரியுமா?

சொந்த வீட்டிலேயே திருடும் அஜீத் வில்லன்: அப்படி எதை திருடுகிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு தற்போதும் திருடும் பழக்கம் உள்ளது என்று விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். அவர் வங்கி திருட்டு தொடர்பான பேங்க் சோர் என்ற இந்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

பேங்க் சோர் படம் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது.

திருட்டு

திருட்டு

சிறு குழந்தையாக இருக்கும்போது எதையாவது திருடியுள்ளீர்களா என்று விவேக் ஓபராயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, குழந்தையாகவா இப்போது கூட திருடிக் கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.

சாக்லேட்

சாக்லேட்

எனக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சாக்லேட் சாப்பிடக் கூடாது என்று என் மனைவி பிரியங்கா சொல்வார். அதனால் எனக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார் என்று விவேக் தெரிவித்துள்ளார்.

மனைவி

மனைவி

என் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கி வைத்திருப்பார் என் மனைவி. நான் சாப்பிடக் கூடாது என்று மறைத்து வைத்திருப்பார். அப்படியும் தேடித் திருடி சாப்பிடுவேன் என்கிறார் விவேக் ஓபராய்.

கிண்டல்

கிண்டல்

சாக்லேட் திருடி மனைவியிடம் மாட்டிக் கொள்வேன். இது குறித்து என் நண்பர்களான நடிகர்கள் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோர் என்னை எப்பொழுதும் கிண்டல் செய்வார்கள் என்று விவேக் கூறியுள்ளார்.

English summary
Bollywood actor Vivek Oberoi says that he still steals chocolates from his house.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil