»   »  நான் பீட்டாவையும், ஜல்லிக்கட்டையும் ஆதரிக்கிறேன்: பாடகி சுசித்ரா

நான் பீட்டாவையும், ஜல்லிக்கட்டையும் ஆதரிக்கிறேன்: பாடகி சுசித்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் பீட்டாவையும், ஜல்லிக்கட்டையும் ஆதரிப்பதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் பெரும் புரட்சி நடந்து வருகிறது. இளைஞர்களும், மாணவ, மாணவியரும் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து பாடகி சுசித்ரா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பீட்டா

நான் பீட்டாவை ஆதரிக்கிறேன். அந்த அமைப்புக்கு நன்கொடை அளித்து வருகிறேன். விலங்குகளை எடுத்து வளர்த்து வருகிறேன். ஆனால் நான் ஜல்லிக்கட்டையும் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அது என் மக்களுக்கு தேவை.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு புல்ஃபைட் கிடையாது. நாங்கள் எங்கள் மாடுகள் மீது அன்பு வைத்துள்லோம். மாடுகளை தாய் போன்று கருதுகிறோம். இது தான் உண்மை.

மாடுகள்

பீட்டா மாடுகளை பாதுகாக்க முயற்சி செய்கிறது என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் இது ஸ்பெயினின் புல்ஃபைட் போன்று என நினைக்கிறார்கள். அந்த விளையாட்டு மோசமானது.

சென்னை

என் அழகிய, அருமையான நகரம் மிகவும் மதிக்கத்தக்க போராட்டத்தை நடத்தியுள்ளது. எந்த அரசியல்வாதியின் தலையீடும் இல்லாமல் போராட முடிவு செய்துள்ளனர்.

English summary
Singer Suchitra tweeted that, I support #PETA, I donate to them, I have adopted animals of my own, but I support #jallikattu because my people NEED it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil