»   »  பாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல்

பாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாவனா போன்று தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.

காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் சந்தியா. காதல் சந்தியா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவரால் தமிழ் திரையுலகில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை.

தன்னை தேடி வந்த படங்களில் நடித்தார்.

திருமணம்

திருமணம்

திரையுலகில் வாய்ப்பு இல்லாததையடுத்து அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

பாவனா

பாவனா

பாலியல் சில்மிஷத்திற்கு ஆளான பாவனா என் தோழி தான். அவருக்கு போன்று எனக்கும் நடந்துள்ளது. சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். கூட்டமான இடங்களாக இருந்ததால் அது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சந்தியா.

துணிச்சல்

துணிச்சல்

பாவனா தனக்கு நடந்த கொடுமை குறித்து துணிச்சலாக புகார் கொடுத்ததால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவரின் துணிச்சலை பார்த்து பிற நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர் என்று சந்தியா தெரிவித்தார்.

குற்றம்

குற்றம்

சிலர் செய்யும் பாலியல் சில்மிஷத்தை வெளியே சொன்னால் நம் பெயர் கெட்டுவிடுமோ என பயந்து பயந்து மூடி மறைப்பதால் அந்த குற்றம் தொடரத் தான் செய்யும். தைரியமாக வெளியே சொன்னால் தான் அது போன்ற குற்றங்கள் குறையும் என சந்தியா கூறினார்.

English summary
Kadhal movie fame actress Sandhya said she too faced sexual harassment like her dear friend Bhavana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil