»   »  இப்ப இல்லை, 3 ஆண்டுகளுக்கு முன்பே போட்டியிட முடிவெடுத்து விட்டேன்: விஷால்

இப்ப இல்லை, 3 ஆண்டுகளுக்கு முன்பே போட்டியிட முடிவெடுத்து விட்டேன்: விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது என்பது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் களமிறங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக இந்தத் தேர்தல் குறித்த பரபரப்பு நிலவி வருகிறது.

I took the decision before 3 years: Vishal

சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தல் முடிவுகள் இரவு 9 மணியளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இத்தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "எங்களது கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்காததால், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவது என கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம். தேர்தல் ஏற்பாடுகள் திருப்தியளிக்கின்றன. தேர்தல் நடிகர்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vishal who is contesting for general secretary post in actors association election has said that he took this decision 3 years back.
Please Wait while comments are loading...