அட்ஜஸ்ட் பண்ணாததால் பட வாய்ப்பை இழந்த பிரியங்கா சோப்ரா !!- வீடியோ
மும்பை: பாலிவுட்டில் அட்ஜஸ்ட் செய்யாததால் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து மனம் திறந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர் என்று அசத்திக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட்டில் அவர் அடைந்துள்ள வெற்றியை பார்த்து சில பாலிவுட் நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.
இந்நிலையில் சினிமா பற்றி ப்ரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது,
வாய்ப்புகள்
சிலர் பரிந்துரைக்கப்பட்டதால் என்னை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு ஹீரோ அல்லது இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டதால் என்னை வெளியேற்றியுள்ளனர்.
இயக்குனர்
ஹீரோ அல்லது இயக்குனரின் காதலிக்காக என் வாய்ப்பு பறிக்கப்பட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன்.
நடிகர்கள்
நான் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய மறுத்துவிட்டேன். எனக்கு மரியாதை அளிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன்.
ஆதரவு
நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் ஆதரவாக உள்ளது. அது தான் என் மிகப் பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் என்றார் ப்ரியங்கா சோப்ரா.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.