»   »  யாரைப் பற்றியும் புறம்பேசாத புண்ணியவதி மனோரமா: வைரமுத்து

யாரைப் பற்றியும் புறம்பேசாத புண்ணியவதி மனோரமா: வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல பாடகியை இழந்துவிட்டதாக மனோரமாவின் இழப்பு பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். யாரைப் பற்றியும் புறம் பேசாதவர் ஆச்சி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனோரமா ஆச்சியின் மறைவையொட்டி பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழ் திரையுலகம் தாயை இழந்து வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

I've lost a good singer: Says Vairamuthu about Manorama

இந்நிலையில் ஆச்சியின் மறைவு பற்றி கவிஞர் வைரமுத்து கூறுகையில்,

யாரைப் பற்றியும் புறம்பேசாதவர் மனோரமா ஆச்சி. யாரும் புறம் பேசாதீர்கள் என்பது தான் ஆச்சி நமக்கு விட்டுச் சென்ற செய்தி. என்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல பாடகியை இழந்துவிட்டோம்.

அவர் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் தான் என்றார்.

English summary
Lyricist Vairamuthu told that Manorama Achi never spoke behind others back and that is the message she has left for us.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil