»   »  போதும்டா சாமி, தேவி படத்தால் நான் கஷ்டப்பட்டது போதும்: விஜய்

போதும்டா சாமி, தேவி படத்தால் நான் கஷ்டப்பட்டது போதும்: விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவி படம் போன்று இனி மூன்று மொழி படங்களை இயக்கவே கூடாது என்ற அளவுக்கு கஷ்டப்பட்டதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.


இந்நிலையில் படம் குறித்து விஜய் கூறுகையில்,


பிரபுதேவா

பிரபுதேவா

தேவி படத்தில் பிரபுதேவாவின் நடிப்பை மிகவும் ரசித்தேன். அவரை வைத்து நிறைய படங்களை இயக்க ஆசையாக உள்ளது. தேவி ஹீரோயினை முன்னிலைப்படுத்தும் கதையாக இருந்தது. பிரபுதேவா வந்ததும் அது ஹீரோ படமாகிவிட்டது.
பெருமை

பெருமை

பிரபுதேவா சிறப்பாக நடித்துக் கொடுத்தார். நான் எதிர்பார்த்ததற்கு மேல் நடித்துள்ளார். அவர் எப்பொழுதும் உறசாகமாக இருப்பார். அவரை வைத்து படம் இயக்கியதில் பெருமையாக உள்ளது.


கஷ்டம்

கஷ்டம்

தேவி படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இயக்க கஷ்டமாக இருந்தது. பிரபுதேவா எளிதாக மூன்று மொழிகளிலும் எளிதில் பேசி நடித்துவிடுவார். பிற நடிகர்களை மூன்று மொழிகளிலும் வசனம் பேச வைப்பதற்குள் 3 படங்களை எடுத்தது போன்று இருந்தது.


தேவி

தேவி

தேவிக்காக இரவு, பகலாக சரியாக தூங்காமல் வேலை பார்த்துள்ளோம். இனி மூன்று மொழி படங்களை இயக்கவே கூடாது என்ற அளவுக்கு கஷ்டப்பட்டுள்ளேன். இருப்பினும் பிரபுதேவா, தமன்னா, சோனுவின் ஒத்துழைப்பால் இந்த படம் சாத்தியமானது.


English summary
Director AL Vijay said that he has suffered a lot for his trilingual film Devi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil