இவரு டைரக்ஷன்ல நடிக்கணும்ன்னு ஆசையா இருக்கு..துருவ் விக்ரம் சொன்ன அந்த டைரக்டர் யாருப்பா?

சென்னை: சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 2019 ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழில் நடிகனாக அறிமுகமானார்.

விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார் துருவ். இந்த மகான் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதை தொடர்ந்து தனக்கு பிடித்த இயக்குநர், பணியாற்ற விரும்பவும் இயக்குநர் என்று பிரபல இயக்குநரின் பெயரை கூறியுள்ளார்.

 அப்பாவுடன் மகான்

அப்பாவுடன் மகான்

சீயான் விக்ரமின் மகனான துரு விக்ரம், 2019 ஆம் ஆண்டு ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். அறிமுக திரைப்படமாக அமைந்த இந்த ஆதித்யா வர்மா திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து பெனிடா சந்து நாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தகுதியான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற நோக்கில், தனது அப்பாவுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்தார்.

 கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் போன்ற பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் சந்தோஷ் நாராயணன். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த மகான் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்பொழுது தனது அடுத்த படத்திற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் நடிகர் துருவ் விக்ரம், தனக்கு பிடித்த இயக்குநர் பற்றிய தகவல்களை வெளியே கூறியுள்ளார்.

 தனுஷுடன் பல வெற்றிகள்

தனுஷுடன் பல வெற்றிகள்

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.

தற்போது இவர் இயக்கத்தில் விடுதலை, அதிகாரம், இறைவன் மிகப் பெரியவன், வாடிவாசல் போன்ற பல படங்கள் உருவாகி கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றது.

 இயக்கத்தில் நடிக்க ஆசை

இயக்கத்தில் நடிக்க ஆசை

உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்விக்கு,"இயக்குநர் வெற்றிமாறனுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருப்பதாக நடிகர் துருவ் விக்ரம் கூறியுள்ளார். நடிகர் துருவ் விக்ரம் சொன்ன இந்த விஷயம் வெற்றிமாறன் காதுகளில் விழுந்தால் அடுத்து துருவ் விக்ரமுடன் வெற்றிமாறன் இணைய வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் கண்டிப்பாக அது வேற லெவல் காம்போவாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X