»   »  இந்த ராம் கோபால் வர்மா ஏன் அர்னாப் கோஸ்வாமியை முத்தமிடத் துடிக்கிறார்?

இந்த ராம் கோபால் வர்மா ஏன் அர்னாப் கோஸ்வாமியை முத்தமிடத் துடிக்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சி சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை முத்தமிட விரும்புவதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரில் பல முத்தக்காட்சிகள் ஆபாசமாக உள்ளதாகக் கூறி கத்தரித்தது சென்சார் போர்டு. படத்தை தான் பார்க்காவிட்டாலும் காட்சிகளை கத்தரித்தது சரியே என சென்சார் போர்டு தலைவர் பஹலாஜ் நிஹ்லானி தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து டைம்ஸ் நவ் செய்தி சேனலில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்ட சென்சார் போர்டு தலைவர் பஹலாஜ் நிஹ்லானியை டைம்ஸ் நவ் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கேள்வி மேல் கேள்வி கேட்டு விளாசினார்.

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

விவாத நிகழ்ச்சியில் அர்னாப் சென்சார் போர்டு சேர்மனை லெப்ட் அன்ட் ரைட் வாங்கியதை பார்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு உச்சி குளிர்ந்து போயுள்ளது. இதையடுத்து அவர் அர்னாபை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

முத்தம்

சென்சார் போர்டு சேர்மன் பஹலாஜ் நிஹ்லானியை வாங்கு வாங்குன்னு வாங்கிய அர்னாப் கோஸ்வாமிக்கு முத்திமிட விரும்புகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.

சென்சார் போர்டு

சென்சார் போர்டு பற்றிய உண்மைகளை எல்லாம் வெளியே கொண்டு வந்த அர்னாபே, உங்களின் காலடிகளின் புகைப்படத்தை அனுப்பினால் நானும், திரைப்படத்துறையினரும் அதை தொடுவோம் என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.

அர்னாப்

சென்சார் போர்டின் காலம் கடந்த விதிமுறைகளை எதிர்த்து அர்னாப் மற்றும் டைம்ஸ் நவ் போராடும் என்று நம்புகிறேன். சென்சார் போர்டு ரசிகர்களை வளர்ந்தவர்களாக மதிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'I want to kiss and make love to Arnab Goswami for Fucking the censor board chairman Pahlaj Nihlani.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil