twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு மிஸ். தீபிகாவின் தலை வேண்டும்...: ட்வீட்டிய கமல் ஹாஸன்

    By Siva
    |

    Recommended Video

    எனக்கு மிஸ். தீபிகாவின் தலை வேண்டும்...ட்வீட்டிய கமல் ஹாஸன்- வீடியோ

    சென்னை: பத்மாவதி படக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் கமல் ஹாஸன்.

    ராணி பத்மினியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பாலிவுட் படம் பத்மாவதி. படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

    வரலாற்றை திரித்து பத்மினியை படத்தில் அசிங்கப்படுத்தியுள்ளதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்துள்ளன.

    தீபிகா

    தீபிகா

    தீபிகா மற்றும் பத்மாவதி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 5 கோடி கொடுக்கப்படும் என்று மீரட்டை சேர்ந்தவரும், ரூ. 10 கோடி கொடுக்கப்படும் என்று ஹரியானா மாநில பாஜக நிர்வாகியும் அறிவித்துள்ளனர்.

    ரூ. 1 கோடி

    ரூ. 1 கோடி

    தீபிகாவை உயிருடன் எரிப்பவருக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ட்வீட்

    எனக்கு தீபிகாவின் தலை வேண்டும்...பாதுகாக்கப்பட வேண்டும். அவரின் உடலை விட தலையை மதியுங்கள். அவரின் சுதந்திரம் முக்கியம். அதை மறுக்க வேண்டாம். பல சமூகங்கள் என் படங்களை எதிர்த்துள்ளன. விழித்திடு இந்தியா. சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லிவிட்டோம். கேளுங்கள் பாரத மாதா என கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.

    ஆதரவு

    ஆதரவு

    பத்மாவதி பிரச்சனையால் பன்சாலி, தீபிகாவின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பன்சாலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Haasan tweeted that, 'I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films. Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X