»   »  கபாலி டீசரை பயந்து கொண்டேதான் தயார் செய்தேன்!- பா ரஞ்சித்

கபாலி டீசரை பயந்து கொண்டேதான் தயார் செய்தேன்!- பா ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்ற பயத்துடன்தான் கபாலி டீசரை நான் உருவாக்கினேன். ஆனால் வெளியான பிறகு தலைவரின் ரசிகர்கள் கொண்டாடியதைப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது, என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார்.

கபாலி டீசர் சர்வதேச அளவில் சாதனைப் படைத்து வருகிறது. இத்தனை குறுகிய காலத்தில் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமாகப் பார்க்கப்பட்ட டீசர் கபாலிதான் என்கிறார்கள் திரையுலகில்.

I was afraid for Rajini fans before teaser release

இந்த சாதனை ட்ரைலரை உருவாக்கிய பா ரஞ்சித்திடம் அதுபற்றிக் கேட்டால், "உண்மையில் நான் பயந்து கொண்டிருந்தேன், இந்த ட்ரைலரை ரஜினி ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்று. தாணு சாரிடம் இதைச் சொன்னபோது, அவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தைரியமா பண்ணுங்க என்றார்.

டீசர் ரிலீசான வேகத்தில் ரசிகர்கள் அதைக் கொண்டாடிய விதத்தைப் பார்த்து கண்ணீரே வந்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சியாகிவிட்டது. இப்போது படம் குறித்து மிகுந்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்றார்.

மே இறுதியில் ஆடியோ ரிலீஸை வைத்திருக்கிறார்கள். அதற்கடுத்த சில தினங்களிலேயே கபாலி ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.

English summary
Kabali directot Pa Ranjith says that he was afraid for Rajini fans before releasing the teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil