»   »  பட வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பரபர பேட்டி

பட வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 5 ஆண்டுகளுக்கு முன்பு பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

காக்கா முட்டை படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் சினிமா பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

பாலிவுட்

பாலிவுட்

தென்னிந்திய படங்களை போன்று பாலிவுட்டில் உள்ளவர்கள் நடிகைகள் சிகப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. தற்போது பல விஷயங்கள் மாறியுள்ளது.

அட்ஜஸ்ட்மென்ட்

அட்ஜஸ்ட்மென்ட்

5 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடியபோது என்னை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள். இந்த பிரச்சனை எனக்கு இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் தெரிவித்து அசிங்கப்படுத்திவிடுவார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

சம்பளம்

சம்பளம்

தற்போது பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை. 2017ம் ஆண்டிலும் நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

முன்னணி நடிகர்கள் படம் ஒன்றுக்கு ரூ.10 கோடி வாங்கினால், முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு ரூ. 3 கோடி மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த விஷயம் மாறவில்லை.

படங்கள்

படங்கள்

கவுதம் மேனின் துருவ நட்சத்திரம், வெற்றிமாறனின் வடசென்னை, இது வேதாளம் சொல்லும் கதை, மணிரத்னம் படம் என்று நிறைய படங்கள் இருந்தாலும் இப்போது தான் சினிமா வாழ்க்கை துவங்குவது போன்று உள்ளது.

இந்தி

இந்தி

டாடி படத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு இந்தி தெரியுமா என்று நடிகர் அர்ஜுன் ராம்பல் கேட்டார், தெரியாது என்றேன். உடனே வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்தனர். அதன் பிறகு ஆடிஷனுக்கு வருமாறு துணை இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். அவர்களின் ஆஷா காவ்லி கதாபாத்திரம் போன்றே நான் இருந்ததால் என்னை ஒப்பந்தம் செய்தனர் என்றார் ஐஸ்வர்யா.

English summary
Actress Aishwarya Rajesh said that she was asked to adjust when she was looking for opportunities in cinema field five years ago.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil