Don't Miss!
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னை ராசி இல்லாதவன் என்று சொந்த நண்பர்களே கலாய்த்தனர்.. விரக்தியின் உச்சத்தில் வெங்கட்பிரபு !
சென்னை: கலகலப்பான காமெடி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் வெங்கட் பிரபு
சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு படத்தை டைம் லூப் பாணியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்போது அசோக் செல்வனின் மன்மதலீலை படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு தனது ஆரம்ப காலகட்டங்களில் சொந்த நண்பர்களே ராசி இல்லாதவன் என்று கூப்பிட்டதாக கூறியுள்ளார்.
“மன்மத லீலை“ கல்யாணம் ஆனவங்க பார்க்க வேண்டிய படம்… பிரேம்ஜி மேடையில் ரகளை !

அஜித்தின் 50வது படம்
சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. முழுக்க காமெடியை மையமாக வைத்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான சென்னை-28 மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட்பிரபு அடுத்ததாக சரோஜா,கோவா,மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். மங்காத்தா அஜித்தின் 50வது படமாக வெளியாகி சக்கை போடு போட்டது. அஜித் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த நிலையில் மங்காத்தா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கியிருப்பார்.

டைம் லூப் பாணியில்
வழக்கமான காமெடி படங்களின் பாணியில் இருந்து சற்று விலகி புதிய முயற்சியில் மாநாடு படத்தை இயக்கியிருந்தார். நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருப்பார். டைம் லூப் பாணியில் உருவான இந்த படம் வெளியாகி சக்கை போடு போட்டது. மாநாடு படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருப்பார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மிரட்டும் திரைக்கதையில் மாநாடு மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது.

இளமை ததும்பும் காதல்
மாநாடு வெற்றி பெற்றுள்ளதால் அடுத்ததாக அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் மன்மதலீலை என்ற படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 1 என அறிவிக்கப்பட்டுள்ளது . முற்றிலும் இளமை ததும்பும் காதல் கதை களத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை வெங்கட் பிரபுவுக்கு மற்றுமொரு வெற்றி படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்பொழுது இயக்குனராக வெற்றிகரமாக உள்ள பிரபு வெங்கட் பிரபு ஆரம்பத்தில் நடிகராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ராசி இல்லாதவன் என்று
ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் நண்பர்களில் ஒருவராக நடித்து இருந்த வெங்கட் பிரபு சில படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார். காதல் சாம்ராஜ்யம், வான்டட்,பூஞ்சோலை உள்ளிட்ட படங்களில் வெங்கட்பிரபு ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிறகு தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் மகன் ஹீரோவாக அறிமுகமான கோடீஸ்வரன் என்ற படத்திற்கும் ஹீரோவிற்கு டப்பிங் பேசி இருந்தார் ஆனால் அந்த படமும் வெளியாகவில்லை. இவ்வாறு தொடர்ந்து வெங்கட் பிரபு பணியாற்றிய படங்கள் வெளியாகாததால் கூட இருக்கும் நண்பர்களே வெங்கட்பிரபுவை ராசி இல்லாதவன் என அழைத்தனர்.