»   »  11 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பெண்ணாக மாறிய நடிகர் பகீர் தகவல்

11 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பெண்ணாக மாறிய நடிகர் பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் 11 வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண்ணாக மாறிவரும் நடிகர் கவுரவ்(கவுரி) அரோரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரும், மாடலுமான கவுரவ் அரோரா பெண்ணாக மாறி வருகிறார். தனது பெயரை கவுரி என மாற்றியுள்ளார். தான் பெண்ணாக மாறிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில் அவர் பிரபல ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பலாத்காரம்

பலாத்காரம்

நான் 11 வயதில் பள்ளியில் உள்ள சீனியர் பையன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். முதலில் சீனியர்கள் என் மீது பாசமாக இருந்தது எனக்கு பிடித்திருந்தது.

பெண்

பெண்

எனக்குள் அப்பொழுதே பெண் உணர்வு இருந்திருக்கிறது. அதனால் பையன்களால் கவரப்பட்டுள்ளேன். சீனியர்கள் பலாத்காரம் செய்ததில் வலியால் துடித்தேன். அது தவறு என்று மட்டும் தெரிந்தது.

தாய்

தாய்

பள்ளியில் நடந்ததை என் தாயிடம் தெரிவித்தேன். ஆனால் அவரோ இதை உன் தந்தையிடம் கூறாதே என்றார். நான் தாயின் பேச்சை மீறி தந்தையிடம் தெரிவித்தேன்.

போலீஸ்

போலீஸ்

என் தந்தை உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. ஏதோ நானே விரும்பிச் சென்றது போன்று என்னை பார்த்தார்கள்.

English summary
Bollywood actor Gaurav(Gauri) Arora said that he was raped when he was 11-years old by senior boys in the school.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil