»   »  ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்தேன்: ஹீரோ ஓபன் டாக்

ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்தேன்: ஹீரோ ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்ததாக நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள், ஆயுதம், பெண்கள் என்று ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். அவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் தனது வாழ்க்கை பற்றி கூறியதாவது,

காதல்

காதல்

நான் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்தேன். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை காதலித்தேன். யாரிடமும் சிக்காமல் தப்பிப்பது தான் புத்திசாலித்தனம்.

போதைப் பொருள்

போதைப் பொருள்

கல்லூரியில் படித்தபோது போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் போதைக்கு அடிமையாகிவிட்டேன். அதில் இருந்து வெளிவர எனக்கு 10 ஆண்டுகள் ஆனது. தயவு செய்து யாரும் போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.

பிள்ளைகள்

பிள்ளைகள்

என் மகன் என்னை போன்று ஆகிவிடக் கூடாது என்பதே என் பிரார்த்தனை. என்னால் என் தந்தை பட்ட கஷ்டங்களை நான் பட விரும்பவில்லை. என் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன்.

தந்தை

தந்தை

என் தந்தை எங்களை சாதாரண குழந்தைகளை போன்றே வளர்த்தார். நான் போர்டிங் ஸ்கூலுக்கு சென்றேன். என் பிள்ளைகளும் அதே போன்று செல்கிறார்கள் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Sanjay Dutt said that he was once in a relationship with three women.
Please Wait while comments are loading...