»   »  விஜய்க்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?: அம்மா ஷோபா விளக்கம்

விஜய்க்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?: அம்மா ஷோபா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிக்க வந்தது பயமாக இருந்தது. விஜய் இந்த அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை என்று அவரது தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய்யை நடிகனாக்கி வளர்த்துவிட்டவர். தற்போது விஜய் தொட்டுள்ள உயரத்தை பார்த்து பெருமையுடன் உள்ளார் எஸ்.ஏ.சி.

இந்நிலையில் அவரும், அவரது மனைவி ஷோபாவும் பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

தனுஷ்

தனுஷ்

எங்களின் குடும்பத்தாருக்கே மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தனுஷின் கொடி படத்தில் நடிக்க எஸ்.ஏ.சி.க்கு வாய்ப்பு வந்தபோது உடனே அதை ஒப்புக்கொள்ளுமாறு கூறினேன் என்கிறார் ஷோபா.

விஜய்

விஜய்

விஜய் அடுத்தடுத்து வெற்றி கொடுப்பது அவரது கடின உழைப்பு மற்றும் கடவுளின் கிருபை. விஜய் நடிக்க வந்தது பயமாக இருந்தது. விஜய் இந்த அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ஷோபா.

சச்சின்

சச்சின்

விஜய் நடித்த காதலுக்கு மரியாதை ஷோபாவுக்கு மிகவும் பிடித்த படமாம். எஸ்.ஏ.சி.க்கு சச்சின் படம் பிடிக்குமாம். சச்சினில் விஜய் க்யூட்டாக நடித்திருப்பார், எப்பொழுது சச்சின் படத்தை டிவியில் போட்டாலும் பார்ப்பேன். பாடி லேங்குவேஜ் செமயா இருக்கும். நீ நல்லா நடிச்சிருக்கன்னு நான் முதன்முதலாக விஜய்யிடம் சொன்ன படமும் சச்சின் தான் என எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்.

உணர்ச்சி

உணர்ச்சி

விஜய் சந்தோஷமாக இருக்கிறாரா, கோபமாக இருக்கிறாரா, கவலையாக இருக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது. எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ள மாட்டார் என ஷோபாவும், எஸ்.ஏ.சி.யும் கூறியுள்ளனர்.

English summary
Vijay's mother Shobha said that she was scared when her son entered film industry. She added that she didn't expect him to reach this height in career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil