»   »  பிரேமம் படத்தை எடுக்க என்னை போன்று 31 ஆண்டுகள் 'வெர்ஜினாக' இருக்கணும்: அல்போன்ஸ் புத்ரன்

பிரேமம் படத்தை எடுக்க என்னை போன்று 31 ஆண்டுகள் 'வெர்ஜினாக' இருக்கணும்: அல்போன்ஸ் புத்ரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரேமம் படத்தின் ஸ்பெஷல் மற்றும் தனித்துவம் என்னவென்றால் நான் திருமணம் முடியும் வரை கன்னித்தன்மையுடன் இருந்தேன் என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் மலையாள படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் சாய் பல்லவி மிகவும் பிரபலமானார். படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் ரீமேக் குறித்து அல்போன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பாலிவுட்

பாலிவுட்

பிரேமம் ரீமேக் உரிமையை பெற இந்தி திரையுலகை சேர்ந்த 5 பெரிய நிறுவனங்கள் என்னை தொடர்பு கொண்டன. பிரேமம் படத்தை ரீமேக் செய்ய தங்களிடம் திறமையான இயக்குனர்கள் உள்ளதாகவும், அவர்கள் படத்தை என்னை விட சிறப்பாக இயக்குவார்கள் என்றும் 2 நிறுவனங்கள் தெரிவித்தன.

பிரேமம்

பிரேமம்

பிரேமம் படத்தின் ஸ்பெஷல் மற்றும் தனித்துவம் என்னவென்றால் நான் திருமணம் முடியும் வரை கன்னித்தன்மையுடன் இருந்தேன். 31 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் கன்னித்தன்மையுடன் இருந்தவர்களால் தான் பிரேமம் படத்தை என்னை விட சிறப்பாக எடுக்க முடியும் என நம்புகிறேன்.

குழந்தை

குழந்தை

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் என்னை போன்ற குழந்தையால் தான் பிரேமம் படத்தை எடுக்க முடியும்...மாஸ்டர்களால் அல்ல. நீங்கள் பிரேமம் படத்தை கச்சிதமாக எடுக்கலாம் ஒரிஜினலை விட ரிச்சாக காட்டலாம்.

கச்சிதம்

கச்சிதம்

பிரேமம் படத்தின் அழகே அது என்னை போன்று பர்ஃபெக்ட் இல்லை. அதனால் என் படத்தை வாங்குபவர்கள் அல்லது மொழி பெயர்ப்பவர்கள் பர்ஃபெக்ட் ஷாட்களை தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.

English summary
Director Alphonse Puthren said on Facebook that, 'The specialty and uniqueness of the film "Premam" is that I was a Virgin till my marriage. If anyone who is a virgin for more than 31 years or more ...I believe they can do Premam much more better than me.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil