»   »  எம் புருஷன் முகத்தை கடைசியா ஒருவாட்டி பாக்கவிடலையே: நந்தினி கதறல்

எம் புருஷன் முகத்தை கடைசியா ஒருவாட்டி பாக்கவிடலையே: நந்தினி கதறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கணவர் கார்த்திக்கின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கவிடாமல் அவரது குடும்பத்தார் தடுத்துவிட்டதாக நடிகை நந்தினி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினிக்கும், ஜிம் மாஸ்டர் கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார் கார்த்திக்.

கார்த்திக்

கார்த்திக்

கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி கார்த்திக்கை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவரின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க விடாமல் கார்த்திக்கின் குடும்பத்தார் தன்னை தடுத்துவிட்டதாக நந்தினி தெரிவித்துள்ளார்.

சாந்தி

சாந்தி

என் மகன் சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையுமே காரணம். அவன் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கக் கூட நந்தினி வரவில்லை என்று கார்த்திக்கின் தாய் சாந்தி கூறியுள்ளார்.

ஏமாற்று வேலை

ஏமாற்று வேலை

கார்த்திக் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் கொடுத்தவர்கள் தன்னை தேடி வந்தபோது தான் இந்த விஷயமே தனக்கு தெரிய வந்தது என்கிறார் நந்தினி.

வெண்ணிலா

வெண்ணிலா

கார்த்திக்கிற்கும் வெண்ணிலா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கூட கார்த்திக் கைதாகியுள்ளார். இந்நிலையில் வெண்ணிலாவை புதைத்த இடத்திற்கு அருகில் தன்னை புதைக்குமாறு கார்த்திக் கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Nandhini said that Karthik's family didn't allow her to see his face for the last time. Karthik committed suicide by consuming poison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil