»   »  " என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்..." - சிம்பு ஓப்பன் டாக்!

" என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்..." - சிம்பு ஓப்பன் டாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
' என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்...' - சிம்பு ஓப்பன் டாக்!- வீடியோ

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற 'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் இசையமைப்பாளர் சிம்பு கலந்து கொண்டார்.

விடிவி கணேஷ் தயாரிப்பில், சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சேதுராமன் இயக்குகிறார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்துகொண்டு பேசினார். தனுஷ் மேடையில் இருக்கும்போது, சிம்பு அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

சிம்பு பேச்சு

சிம்பு பேச்சு

சிம்பு, இறைவனுக்கு நன்றி எனச் சொல்லி பேசத் தொடங்கினார் சிம்பு. "சந்தானத்தை நான் சினிமாவில் அறிமுகப்படுத்தவில்லை. அவர் திறமையானவர். அவரோட திறமைக்கு என் மூலமா அங்கீகாரம் கிடைச்சிருக்கு. நான் தான் அவரை அறிமுகப்படுத்துனேனு இனியும் சொல்லவேணாம்.

மியூசிக் இன்ஸ்பிரேஷன்

மியூசிக் இன்ஸ்பிரேஷன்

இளையராஜா சார் மியூசிக் கேட்டு வளர்ந்தவன் நான். மைக்கேல் ஜாக்சன் எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கார். என் அப்பா எனக்கு சின்ன வயசுல இருந்து கூடவே இருந்து மியூசிக் சொல்லிக் கொடுத்திருக்கார். ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு இசையில் ஹெல்ப் பண்ணி இருக்கார். எனக்கு அண்ணனா, அம்மாவா, குருவா இருந்தவர் யுவன் ஷங்கர் ராஜா.

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

நான் இன்னிக்கு ஒரு மியூசிக் டைரக்டரா இருக்கேன்னா அதுக்கு முதல் காரணம் யுவன் ஷங்கர் ராஜா. நிறைய பேரோட மியூசிக்ல பாடல்கள் பாடியிருக்கேன். எனக்கு சான்ஸ் கொடுத்த அத்தனை இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. அனிருத், பிரேம்ஜி வரைக்கும் எல்லோர்கிட்டயும் நான் கத்துக்கிட்டு இருக்கேன்.

நன்றிக்கடன்

நன்றிக்கடன்

வாலி சாரை ரொம்ப மிஸ் பண்றேன். சின்ன வயசுல எனக்காக அவர் எழுதின பாட்டுல, ' சிம்பு உன் நண்பன் தானடா...' ங்கிற வரி வரும். இந்த வரி வேணாமேன்னு சொன்னதுக்கு, "நாளைக்கு நீ வளந்துருவடா.. அதுக்கு இப்பவே நான் எழுதினதா இருக்கட்டும்"னு சொன்னார். அவருக்கு நன்றி செலுத்துற விதமா நான் எழுதின பாட்டுல 'வாலி போல பாட்டு எழுதத் தெரியல...'ங்கிற வரியை எழுதினேன்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ்க்கு ஏதாவது பிரச்னைனா சிம்புவ இழுக்குறது, சிம்புவுக்கு ஏதாவது பிரச்னைன்னா தனுஷை இழுக்குறதும் இங்கே பழக்கமா இருக்கு. எதிரிகள்னு சொல்லப்படுற ரெண்டு பேரும் வளர்ந்து உயரத்துக்கு போவோம். 'துள்ளுவதோ இளமை' படத்து ஹீரோ பாக்குறதுக்கு நல்லாவே இல்லனு பேசுனாங்க.

காதல் கொண்டேன்

காதல் கொண்டேன்

'காதல் கொண்டேன்' படம் பார்க்கும்போது என் பக்கத்தில் செல்வராகவன் உக்காந்திருந்தார். படம் பார்க்கும்போது டஸ்டர் சீன் பார்த்துட்டு, தூங்கிட்டுருந்த செல்வராகவனை எழுப்பி படம் சூப்பர் ஹிட்டுனு சொன்னேன். 'அப்படியா... ஓகே சார்'னு சொல்லிட்டு மறுபடியும் தூங்கிட்டார்.

தனுஷ் உடன்

தனுஷ் உடன்

'காதல் கொண்டேன்' படத்தை தனுஷ் கூட ஆல்பட் தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கேன். எல்லோரும் எனக்கும் தனுஷுக்கும் எனக்கும் போட்டி இருக்குனு சொல்லுவாங்க. ஆனா, எங்களுக்குள்ள அன்பு இருக்கு. அது இன்னிக்கும் இருக்கு. என்னிக்கும் இருக்கும். எங்களுக்கு இடையில நிறைய பேர் நிறைய விஷயங்களை பண்ணியிருக்காங்க. ஆனா, அதையெல்லாம் மீறி ரெண்டு பேரும் அன்போட இருக்கோம்." எனப் பேசினார் சிம்பு.

English summary
Simbu was speaks at the 'Sakka Podu Podu Raja' audio launch which was held at the Chennai kalaivaanar arangam. Actor Dhanush participated in this function as a special guest. Simbu talked about dhanush "I watched FDFS with my enemy dhanush", he told.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil