»   »  ரஜினியை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? - இயக்குநர் சமுத்திரக்கனி

ரஜினியை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? - இயக்குநர் சமுத்திரக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் நான் சிகப்பு மனிதன் படத்தை மட்டும் நான் 64 முறை பார்த்திருக்கிறேன். அந்த அளவு ரஜினியின் வெறித்தனமான ரசிகன் நான், என்று கூறியுள்ளார் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி இயக்கம், நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் அப்பா.

I watched Rajini movie 64 times, says Samuthirakkani

இந்தப் படத்துக்காக அவர் அளித்த பேட்டியொன்றில் ரஜினியை தான் எந்த அளவு ரசித்தவன் என்பதைக் கூறியுள்ளார்.

தன் இளம் வயதில் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படம் பார்த்த அனுபவத்தை இப்படிப் பகிர்ந்துள்ளார்.

நானும் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகன்தான். இதை அண்மையில் வந்த நான் சிகப்பு மனிதன் பட விழாவில் சொல்ல விரும்பினேன். ஆனால் அது வேறு இடம். நம்முடைய மேடையில் சொல்ல வேண்டும் என விட்டுவிட்டேன்.

இப்போது சொல்கிறேன். என் சின்ன வயதில் தலைவரின் நான் சிகப்பு மனிதன் வெளியானது. அப்போதெல்லாம் படம் பார்க்க கையில் காசிருக்காது. திருடிப் போய் பார்க்கலாம் என்றால் கூட வீட்டில் ஒரு பைசா வைத்திருக்க மாட்டார்கள்.

தியேட்டருக்குப் போனால் உள்ளே விட மாட்டார்கள். அதனால் முறுக்கு விற்கும் வேலையைச் செய்தேன். முறுக்கு டப்பாவை எடுத்துக் கொண்டு உள்ளே போய் பார்த்துவிடுவேன்.

எங்க ஊரில் 16 நாட்கள் ஓடியது நான் சிகப்பு மனிதன். ஒரு நாளைக்கு நாலு காட்சி. மொத்தம் 64 காட்சிகள் நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அந்த அளவுக்கு ரஜினியை எனக்குப் பிடிக்கும்," என்றார்.

English summary
In an interview Director Samuthirakkani says that he loved Rajinikanth very much and he saw his Naan Sigappu Manithan 64 times at his young age.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil