»   »  பாட்டி ஆகும்வரை கூட நடிப்பேன் - பாலிவுட் நடிகை பேச்சு

பாட்டி ஆகும்வரை கூட நடிப்பேன் - பாலிவுட் நடிகை பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகை அலியா பட், தான் சினிமாவில் 90 வயது வரை நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். திருமணம், வயது ஆகியவை சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு மட்டும்தானா, ஆண்களுக்கு இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், அலியா பட். இவர் திரையுலகிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இதுவரை 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில், இவர் சிறந்தவர். அலியா பட் நடித்த பல படங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. இவரும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

I will act until 90 years: bollywood actress

ஆண்களுக்காக மட்டும், முதிர்ந்த வயது வரை கதைகள் தயார் செய்கின்றனர். ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை. இளம் வயது என்றால், ஹீரோயினாக நடிக்க வேண்டும். அதற்குப் பின், ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்.

மற்ற எந்தவிதமான வித்தியாசமான முயற்சியையும் நம் இயக்குனர்கள் மேற்கொள்வது இல்லை. இதனால், நடிகைகள் ஒரு சில ஆண்டுகளிலேயே, திரைத்துறையை விட்டு விலக வேண்டியுள்ளது. எனக்கு மட்டும் சரியான வாய்ப்புக் கிடைத்தால் 90 வயது வரை நடிப்பேன்' என்று கூறியுள்ளார் அலியா பட்.

English summary
Alia Bhatt has questioned whether the age and the marital status are for women in cinemas, not men. "If I get the right chance, I will act until 90 years," she said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil