Just In
- 5 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 5 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 8 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 9 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அரசியல் நிலைப்பாடு.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.. மீண்டும் நழுவிய ரஜினி!
சென்னை: அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினி பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என்று கூறியிருந்தார் ரஜினி.

முடிவை அறிவிப்பேன்
இதனால், அவர் கட்சி தொடங்குவது பற்றி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு விவாதம் எழுந்தது. அவர் இனி கட்சி தொடங்க வாய்ப்பில்லை என்றும் தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்திருந்தார்.

கட்சித் தொடங்கினால்
அதன்படி, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேசிய ரஜினி, கட்சித் தொடங்கினால் ஏற்படும் சாதக பாதகங்களை பற்றி ஆலோசித்தார்.

அறிக்கை மூலம்
2 மணி நேரமாக நடந்த இந்த ஆலோசனை கூட்டம் 12 மணி அளவில் முடிந்தது. நிர்வாகிகளின் கருத்தை கேட்டுக்கொண்ட ரஜினி, அறிக்கை மூலம் தனது முடிவை அறிவிக்க இருக்கிறார் என்றும் இன்று அல்லது நாளை அந்த அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

கட்டுப்படுவோம்
இதற்கிடையே ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் ஸ்டாலின், ரஜினி, அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது பற்றி இன்று பேசப்பட்டது. ரஜினி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் எனக் கூறியுள்ளோம் என்றார்.

அவ்வளவு சீக்கிரம்
இந்நிலையில், தனது போயஸ் கார்டன் வீட்டின் அருகில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அவங்க தங்கள் கருத்துகளை சொன்னார்கள். நானும் என் கருத்தை தெரிவித்தேன். நீங்க எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள் கூட இருக்கோம் என்றார்கள். நான் என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.