»   »  சமந்தா-நாகசைதன்யாவுக்கு எப்போது டும் டும் டும்... நடிகர் நாகார்ஜுனாவின் பதில் இதோ!

சமந்தா-நாகசைதன்யாவுக்கு எப்போது டும் டும் டும்... நடிகர் நாகார்ஜுனாவின் பதில் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது மகன் நாகசைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் எப்போது திருமணம் செய்து வைக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் காதலித்து வருகின்றனர். இருவருமே தெலுங்கில் முன்னணியில் உள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டு பெற்றோர்களும் ஓகே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

I Will Announce Wedding Dates Soon: Nagarjuna

சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக வெளியில் சென்ற படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவியது. இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்த சமந்தா இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, நாகார்ஜுனாவின் இன்னொரு மகனான அகிலும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. எனவே அகில் மற்றும் நாக சைதன்யா இருவரின் திருமணத்தையும் ஒரே மேடையில் நடத்த நாகார்ஜுன் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நாகார்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், 'நாக சைதன்யா - சமந்தா' திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், "திருமண தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் அறிவிப்பேன்" எனப் பதிலளித்தார்.

இந்த வருடம் இறுதியில் சமந்தா-நாகசைதன்யா நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலகுவார் என்று கூறப்படுகிறது.

English summary
The much awaited Naga Chaitanya-Samantha Ruth Prabhu wedding dates are still to be decided as Akkineni Nagarjuna said on Monday that they are still waiting for an “auspicious” time for the nuptials.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X