twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அத்தனை சாதனைகளையும் அடித்து நொறுக்கி 'ஐ' 1000 கோடி வசூலிக்கும்... ஆஸ்கார் ரவிச்சந்திரன் நம்பிக்கை!

    |

    சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என அதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    நீண்ட காலத் தயாரிப்பில், பிரம்மாண்டமாய் தயாராகி உள்ளது ஐ படம். ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். விக்ரமிற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீசாகிறது.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அப்போது அவர் கூறியதாவது:-

    படநீளம்...

    படநீளம்...

    படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டதே?

    ஐ' படம் ஆச்சரியப்படுத்தும் வகையிலும், பிரமிப்பூட்டும் வகையிலும் இருக்கும். படத்தின் நீளம் இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. இப்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் நீளத்தை 3 நிமிடங்கள் அதிகரித்து இரண்டு மணி ஐம்பது மூன்று நிமிடங்களாக அதிகரித்திருக்கிறோம்.

    யு/ஏ சான்றிதழ்...

    யு/ஏ சான்றிதழ்...

    ரிவைஸிங் கமிட்டியில் என்ன சான்றிதழ் கிடைத்தது?

    படம் யுஏ சான்றிதழுடன்தான் வெளியாகிறது.

    ஐ ரிலீஸ்...

    ஐ ரிலீஸ்...

    எந்தெந்த உலக நாடுகளில் ஐ வெளியாகிறது?

    சீனா, ஜப்பான் தவிர உலகம் முழுவதும் நாளை - புதன்கிழமை படம் வெளியாகிறது. பாகிஸ்தான், உக்ரைனிலும் நாளை படம் திரைக்கு வருகிறது.

    சீனாவில் ரிலீஸ்...

    சீனாவில் ரிலீஸ்...

    சீனா, ஜப்பானில் படம் எப்போது திரைக்கு வரும்?

    இந்த படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பிப்ரவரி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், அப்போது ‘ஐ' படத்தை அங்கு திரையிட திட்டமிட்டு இருக்கிறோம். இதேபோல் ஜப்பானிலும் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

    ரூ. 1000 கோடி வசூல்...

    ரூ. 1000 கோடி வசூல்...

    இப்படம் உலகம் முழுவதும் இந்தப் படம் 1000 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறோம் என இவ்வாறு ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    English summary
    The producer of I film Oscar Ravichandiran has expressed his confidence that the film will collect Rs. 1000 crores and breaks all the records.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X