»   »  எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவேன் - சிம்பு

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவேன் - சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து எனது ரசிகர்களுக்கு பெருமை சேர்ப்பேன்" என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.

பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

I Will Come out all Problems and Pour my Fans Proud - Simbu

இந்நிலையில் " எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், ஒருசிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் எனது ரசிகர்கள் பெருமை கொள்ளும் விதமாக அவற்றில் இருந்து மீண்டு வருவேன்". என்று நடிகர் சிம்பு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மேலும் கடந்த புத்தாண்டில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜனவரி 1 ம் தேதி வெளியான அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் இதுவரை 10 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் சுமார் 2௦,௦௦௦க்கும் அதிகமான பேர் இந்த டிரெய்லரை லைக் செய்திருக்கின்றனர்.

இதனால் 2016 ல் 10 லட்சம் பார்வைகளைக் கடந்த முதல் டிரெய்லர் என்ற பெருமையை அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் பெற்றிருக்கிறது.

சிம்புவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு, அனிருத் மீது மேலும் ஒரு வழக்கு தூத்துக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீப் பாடல் வழக்கில் சிம்புவிற்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதற்கான விடை இன்னும் சில மணித்துளிகளில் தெரிந்து விடும்!

English summary
Beep Song Issue: "No matter how many Problems, Come out and Pour my Fans Proud" Actor Simbu Wrote on His Twitter Page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil