»   »  குடிகாரன் என்று திட்டிய 'வாயால்' சல்மானைப் புகழும் விவேக் ஓபராய்!

குடிகாரன் என்று திட்டிய 'வாயால்' சல்மானைப் புகழும் விவேக் ஓபராய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மானின் சுல்தானை கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்ப்பேன் என நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்திருக்கிறார்.

சல்மான் கான் -அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான 'சுல்தான்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் வெளியான 3 நாட்களில் இப்படம் 106 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

I will definitely watch Sultan says Vivek Oberoi

இப்படத்தில் சல்மானின் நடிப்பு நன்றாக இருந்ததாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய் தனது பங்குக்கு சல்மானைப் பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''சுல்தான் படத்தில் சல்மானின் நடிப்பு மாறுபட்ட நடிப்பு என்னைக் கவர்ந்தது. சல்மான் போன்ற ஒரு பெரிய நடிகர் இதுபோன்ற படங்களில் நடிப்பதைப் பார்க்கும்போது நன்றாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரெய்லரை மட்டும்தான் பார்த்தேன். கண்டிப்பாக இப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கப்போகிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்க்காக, சல்மான் கானை குடிகாரன் என்று திட்டிய விவேக் ஓபராய் தற்போது அவரைப் புகழ்ந்து தள்ளுவதைப் பார்த்து, ஒட்டுமொத்த பாலிவுட் உலகமும் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது.

English summary
''I will definitely watch the movie (Sultan) in Theater'' Bollywood actor Vivek Oberoi says In Recent Interview.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil